கார்ப்பரேட் நிறுவனங்கள் வாடகை கார், ஆட்டோ சேவையில் கால்பதிக்க, பலர் பாதிக்கப்பட்டனர். கொரோனா கட்டுப்பாடுகள் முடிந்து இப்போது தான் சலூன் மற்றும் ப்யூட்டி பார்லர்கள் கடை திறந்துள்ளனர். இந்நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் இங்கும் தடம் பதித்துள்ளது. செயலி மூலம் அழைத்தால் உங்கள் வீடு தேடி வந்து கட்டிங், சேவிங் செய்து செல்வார்கள். இதனால் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர் சலூன் கடை உரிமையாளர்கள்.
”இதன் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும் என்று தெரியவில்லை. கழுத்தை நெரிக்கும் சூழல் ஏற்பட்டால் எதிர்த்து போராட்டம் நடத்துவோம்” என்கிறார் திருச்சி, உறையூரில் சலூன் கடை நடத்தி வரும் அசோக். இதை வழிமொழிகின்றனர் திருச்சி மருத்துவ சங்கத்தின் நிர்வாகிகள் செல்வராஜ். தர்மலிங்கம், முருகேசன் உள்ளிட்டோர்.