திருச்சியில் நாளை குழந்தைகள் சிறுவர்களுக்கான DANZEE 2022 நடன போட்டி!
திருச்சி உறையூர் ராமலிங்க நகர் பகுதியில் அமைந்துள்ளது ட்விங்கிள் டோஸ் என்ற டான்ஸ் அகாடமி .இந்த நடனப்பள்ளி சார்பில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான டான்சி 2022 என்ற பதினோராவது ஆண்டு நடனப் போட்டி திருச்சி தேவர் ஹாலில் 4/12/2022 காலை நடைபெறுகிறது.
குழந்தைகள், சிறுவர்கள் தனி நடனம் மற்றும் சிறுவர்கள் குழு நடனம் ஆகிய மூன்று பிரிவுகளாக இந்த நடன போட்டி நடைபெறுகிறது.
காலையில் நடன போட்டி மற்றும் மாலையில் பரிசளிப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலைமாமணி ஸ்ரீதர் மாஸ்டர் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர், தொலைக்காட்சி புகழ் நடிகர் வினோத் பாபு, காஸ்டிங் டைரக்டர் ரிருபாய், நடுவராக திரைப்பட நடன உதவி இயக்குனர் ரகு, ஒன்வே ஸ்டார் பவுண்டேஷன் நிறுவனர் ஹாரி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
நிகழ்ச்சிகளை மனோஜ் தொகுத்து வழங்க உள்ளார். இப்போட்டியில் குழந்தைகள் பிரிவில் முதல் பரிசாக ரூபாய் 5000 இரண்டாம் பரிசாக ரூபாய் 3000 .ஜூனியர் தனி பிரிவில் முதல் பரிசாக ரூபாய் 8000 இரண்டாம் பரிசாக ரூபாய் 5000 .ஜூனியர் குரூப் பிரிவில் முதல் பரிசாக ரூபாய் 10,000 இரண்டாம் பரிசாக ரூபாய் 7000 வழங்கப்பட உள்ளது.
ஐந்து வயது முதல் 13 வயது உள்ளே குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இதில் பங்கேற்கலாம் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.