எல்ஐசி வழங்கும் டிஜிட்டல் பாலிசி
எல்ஐசி நிறுவனம் ஏஜென்ட்டுகள் மூலம் காப்பீடு எடுப்பதற்காக ஆனந்தா என்ற பெயரில் புதிய டிஜிட்டல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் காகிதப் பயன்பாடின்றி எல்ஐசி எடுக்க முடியும்.
இந்திய காப்பீட்டு துறை வரலாற்றில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதியின் மூலம் காப்பீட்டு விற்பனை அதிகரிக்கவும், புதிய விற்பனை வாய்ப்பை உருவாக்கவும் இந்த புதிய நடைமுறை பெரும் உதவியாக இருக்கும் என காப்பீட்டு முகவர்கள் தெரிவிக்கின்றனர்.