தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். இதனால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதன் காரணமாக, ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகின்றன. இந்த சூழ்நிலையில், பலர் இனிப்புகள், உடைகள், பரிசுகளை தங்களுடன் எடுத்துச் செல்கிறார்கள். இவை அனைத்தும் ரயில்களில் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
ஆனால், சில பொருட்களை ரயில்களில் எடுத்துச் செல்ல தடை உள்ளது. அந்த வகையில், பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை எடுத்து செல்ல தடை உள்ளது. ஏரு சிறிய தவறு கூட பெரிய விபத்துக்கு வழிவகுக்கும். ஏனென்றால், ஒரு சிறிய தவறு கூட பெரிய விபத்திற்கு வழிவகுக்கும். ஆகையால், இவற்றை எடுத்துச் செல்ல வேண்டாம்.
தீபாவளியின் போது ரயில்வே அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் கண்காணிப்பை மேற்கொள்கின்றனர். ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மற்றும் ஊழியர்கள் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் சிறப்பு சோதனைகளை மேற்கொள்கின்றனர். அவர்கள் பட்டாசுகள் அல்லது எரியக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்பவர்களைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கின்றனர்.
இந்திய ரயில்வே சட்டத்தின்படி, தடை செய்யப்பட்ட பொருட்களை ரயிலில் எடுத்துச் சென்றால், 164 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். மேலும், குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒருவருக்கு ரூ.1,000 வரை அபராதம், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்துக் கூட விதிக்கப்படலாம்.
பயணிகளின் பாதுகாப்பிற்கு ரயில்வே மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது. அதனால்தான் எரியக்கூடிய பொருட்கள், ரசாயனங்கள், பட்டாசுகள், கேஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட பொருட்களை ரயில்களில் எடுத்துச் செல்ல தடை விதித்துள்ளனர்.



