மார்ஜின் டிரேடிங் தெரியுமா?
மார்ஜின் டிரேடிங் தெரியுமா?
கொரோனா வரவுக்குப் பின் பங்குச்சந்தை புத்துயிர் பெற்றதில், இந்தக் கடனை உபயோகிப்போரின் எண்ணிக் கையும் அதிகரித்துள்ளது. மார்ஜினாகக் குறிப்பிடப்படும், சுமார் 20% பணத்தை மட்டும் நாம் கொடுத்தால் போதும்; மீதியை புரோக்கராக செயல்படும் வலைதளங்கள் கடனாகத்தரும்.
ஆகவே ஒருமடங்குக்கு பதிலாக ஐந்து மடங்கு பங்கு களை வாங்கலாம். பணமாகத் தர இயலாவிட்டால், பங்குகளை அடமானமாகத் தரலாம். நாம் எதிர்பார்த்த லாபம் வந்தவுடன் பங்குகளை விற்று புரோக்கருக்கு பணத்தையும், ஒரு சிறுவட்டித் தொகையையும் தந்தால் போதும். ஒருவேளை நஷ்டம் ஏற்பட்டால் உடனடியாக அதை சமன் செய்யும் வகையில் பணம் அல்லது வேறுபங்குகள் தரவேண்டியிருக்கும்.
இதற்கு நமக்கு ஒரு மார்ஜின் டிரேடிங் வசதியுள்ள அக்கவுன்ட் இருக்க வேண்டும்.
ஜெரோதா, ஐசிஐசிஐ டைரக்ட் போன்ற எல்லா ஆன்லைன் டிரேடிங் நிறுவனங்களும் இந்த வசதியைத் தருகின்றன. இதில் ஒரு மினிமம் பேலன்ஸ் வைத்திருத்தல் அவசியம். லாபம் வரும் போது அதை பலமடங்கு அதிகரிக்க மார்ஜின் டிரேடிங் உதவுவதால், மிகவும் விரும்பப்படுகிறது.
நல்ல கடனோ, கெட்ட கடனோ, அளவுக்கு மீறிப்பணம் இழக்க வைக்கும் கடன்களைத் தவிர்ப்பது நல்லது.