இபி கட்டணம் அரசின் புதிய முடிவு தெரியுமா?
மின்வாரிய அலுவலகங்களில் பணி சுமையை குறைப்பதற்காக, மின்சார வாரியத்தில் சில மாற்றங்களை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது மின்கட்டணம் ரூ.1,000க்கு மேல் இருந்தால் அதை ஆன்லைனில் பண பரிவர்த்தனை, காசோலை, வரைவோலை ஆகியவற்றின் மூலம் மட்டுமே இனி செலுத்த வேண்டும்.
அதன்படி 372 யூனிட்களுக்கு தாண்டிய வீட்டு உபயோக பயனாளர்கள் மின்வாரிய அலுவலக கவுண்டர்களின் இனி பணம் செலுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டால் பணம் செலுத்துவதும், கவுண்டர்களின் தேவையற்ற பணத்தை கையாள்வதும் தவிர்க்கப்படும்.