Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

தொழில் அனுபவம் நிறைந்த இவங்க என்ன சொல்றாங்க தெரியுமா பிசினஸ் குறித்து….

1

பிசினஸ் குறித்து…. இவங்க என்ன சொல்றாங்க…

விளம்பரத்தால் வாழவில்லை…

4

எது தரமோ அதை மட்டும் விற்பனை செய்தால் போதும். தரத்தில் அதிகம் கவனம் செலுத்தினால் விற்பனை எளிதாகிவிடும். போட்டியாளர்களை பற்றி யோசிக்கத் தேவையில்லை.

3

ஒரு முன்னணி தொலைகாட்சியில் மணிக்கொரு முறை, “என் பொருள் தான் தரமானது, தரமானது” என கூவிக்கூவி விற்க வேண்டும் என்று விரும்பியதில்லை. நாங்கள் விளம்பரத்தால் வாழ முயற்சிப்பதில்லை. நிஜத்தில் வாழவே நினைக்கிறோம்.

– நஜீமா ஃபாரிக், நிறுவன பங்குதாரர், ஏ.எம்.கே. ஸ்டீல்,

– நஜீமா ஃபாரிக், நிறுவன பங்குதாரர், ஏ.எம்.கே. ஸ்டீல், திருச்சி  (ஸ்டார் மற்றும் மெகா ஸ்டார் திரையரங்க உரிமையாளர் எம்.எஸ்.சிராஜீதின் மகள் நஜீமா ஃபாரிக்.

ஈடுபாடு தாங்க முக்கியம்…

என்னுடைய வேலையில், உள்ள ஆர்வமே என்னை இந்த உயரத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. “எங்கெல்லாமோ தேடி அலைந்தேன் கிடைக்கவில்லை. ஆனால் உங்கள் கடையில் கிடைத்துவிட்டது. ரொம்பவும் மகிழ்ச்சி” என வாடிக்கையாளர்கள் கூறும் போது ஏற்படும் சந்தோஷம் தொழிலில் மேலும் மேலும் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்துவிட்டது.

– பரதன் பேட்டரி கடை, சிங்காரத்தோப்பு

– பரதன் பேட்டரி கடை, சிங்காரத்தோப்பு

 

எல்லாம் மேல உள்ளவன் பார்த்துக்குவான்…

தொழில்முனைவோராக வேண்டும் என விரும்புவோர் வரவு செலவு கணக்குகளை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தொழில் தொடங்குவதற்கு கடன் பெறுவது தவறல்ல. ஏற்கனவே வங்கியில் கடன் பெற்று தொழில் தொடங்கி இருந்தோமென்றால் கடனை உரிய முறையில் திருப்பி செலுத்த வேண்டும். இல்லையேல் அது உங்கள் தொழிலை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்வதை தடுத்து விடும்.

ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வங்கியில் கடன் பெற, இரண்டு வருடம் முதல் மூன்று வருடமாவது நாம் வருமான வரி தாக்கல் செய்திருக்க வேண்டும். உங்கள் வர்த்தகத்தின் வரவு செலவு கணக்குகளை கணக்கு எழுதுவோர் அல்லது ஆடிட்டர் பார்த்துக் கொள்வார் என்று இல்லாமல் நாமே ஒரு முறையாவது சரி பார்த்துக் கொண்டால் மட்டுமே தொழிலைப் பற்றிய முழுவிவரத்தையும் அறிந்து கொள்ள முடியும்” என்றார்.

– கே.மகேஷ் மாணிக்கம், ஆடிட்டர்

– கே.மகேஷ் மாணிக்கம், ஆடிட்டர்

 

ஏற்றுமதியில் வருமானம்…

விவசாய பொருட்களுக்கு  உலகம் முழுவதும் மிகப் பெரிய சந்தை உள்ளது. அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திருச்சியில் பன்னாட்டு விமான நிலையம் இருக்கிறது. பயணிகள் விமானத்தில் 22 டன் வரை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. திருச்சியில் விளைவிக்கப்படும் வாழை மற்றும் வாழையினால் தயாரிக்கப்படும் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.

– என்.கனகசபாபதி, திருச்சி வர்த்தக மையத்தின் தலைவர் :

– என்.கனகசபாபதி, திருச்சி வர்த்தக மையத்தின் தலைவர் :

 

டெக்னாலஜி அவசியம்…

தொழில் ஆரம்பித்து வீடு வாங்க 30 ஆண்டுகள் பிடித்தது. தொழிலில் நேர்மையாக இருந்தது, தொழிலில் டெக்னாலஜியை பயன்படுத்திக் கொண்டது, முக்கியமாக கடன் கொடுக்காமல் வியாபாரம் செய்தது, சிரமமான காலகட்டத்திலும் நம்பிக்கையை தந்தது” என்கிறார். எந்த அடிப்படையில் இருந்தும் மேலே உயரத்துக்கு வரலாம் என்பதற்கு இதைவிட வேறென்ன உதாரணம் வேண்டும்.

-அருண் ஐஸ்கிரீம் சந்திரமோகன்

-அருண் ஐஸ்கிரீம் சந்திரமோகன்

 

புத்தியை வச்சு உழைக்கணும்…

வர்த்தகத்தில் பொருட்கள் மட்டும் அல்லாது நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளும் தரமாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்ற கொள்கை வேண்டும். தொழில் மூலம் மிகச் சிறந்த சமுதாயசூழலை உருவாக்க முடியும். மழுங்கின கோடாரியை வைத்து மாங்கு மாங்கு என்று  வேலை பார்க்கும் கடுமையான உழைப்பாளியாக இருந்தால் மட்டும் போதாது. புத்தியை பயன்படுத்தி உழைக்க வேண்டியதே முக்கியம்…

– பெலிக்ஸ் ராஜ் , நிறுவனர், இமேஜ் ஹைடெக் பர்னிச்சர் .

– பெலிக்ஸ் ராஜ் , நிறுவனர், இமேஜ் ஹைடெக் பர்னிச்சர் .

 

 முதல் கஸ்டமரே நாம தாங்க…

எங்களுடைய தயாரிப்பு மற்றும் விற்பனைப் பொருட்களுக்கு நாங்களே முதல் நுகர்வோர். நாங்கள் திருப்தி அடைந்தால் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்குவோம். எந்த நேரத்திலும் இரசாயனம் கலந்து நஞ்சை மக்களுக்கு தந்துவிடக்கூடாது என்பதில் விழிப்புடன் உள்ளோம்.

– புவனேஸ்வரி, ‘நலமுடன்’ மரச்செக்கு ஆலை,

 

நேற்று இகழ்ந்தவர்கள் நாளை புகழ்வார்கள்…

தோல்விகள் ஏற்பட்டால் அதை எண்ணி நொறுங்கி விடாமல், எதிர்த்து மோதி, எந்தப் பிழையால் இந்தத் தவறு ஏற்பட்டது என்பதை உணர்ந்து பயணிப்பது தான் வெற்றிக்கு வழி செய்யும்.

பொறுமையும், நிதானமும் ஆன்மாவின் குணங்கள் என்று சொல்கிறார்கள். அந்த வழியில் சென்று வெற்றி அடைந்தவர்கள் ஆயிரமாயிரம் உள்ளனர்.  வெற்றிக்காக காத்திருக்காதீர்கள். வெற்றிக்காக உழையுங்கள்.

முயற்சிகள் பல செய்து, விடாமுயற்சியுடன் உழையுங்கள். போராடும் போது, “வீண்முயற்சி செய்கிறாய்” என்றவர்களே, நீங்கள் வென்ற பிறகு, “விடாமுயற்சியுடன் உழைத்தவர்” என்று புகழாரம் சூட்டுவார்கள்.

2
– திருமதி கேத்தரின், ஆரோக்கியசாமி.

– திருமதி கேத்தரின், ஆரோக்கியசாமி.

 

அடுத்தவரை பார்த்து காப்பியடிக்காதீங்க….

“தொழில் தொடங்க விரும்புவோர், பிறரைப் பார்த்து, இந்த தொழில் செய்து அவர் பயன் பெற்றுவிட்டார், நாமும் தொடங்கலாம் என்று தொடங்கினால் அது  அவசரத்திற்காக தொடங்கப்பட்ட தொழிலாகிவிடும். அதில் வெற்றி கொள்ள முடியாது.

ஒரு தொழில் தொடங்கும் முன் அந்தத் தொழில் குறித்து எனக்கு என்ன தெரியும்., அதை நான் எப்படி கற்றுக் கொள்ள முடியும், அதை எப்படி செயல்படுத்த முடியும் என்று ஆலோசித்து சிந்தித்து ஒரு தொழிலைத் தொடங்கி அந்தத் தொழிலை தினம் தினம் கற்றுக் கொண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

ஆர்.சண்முகம், அரியமங்கலம் தொழிற்பேட்டை தொழிற்சங்கத் தலைவர்

தொழில்முனைவோராக விரும்புவோர்க்கு உதவியாக திருச்சி மாவட்ட குறு, சிறு தொழில் முனைவோர் சங்கம் இயங்குகிறது. அனைத்து வழிகாட்டுதலும் அங்கு வழங்கப்படுகிறது. அரசின் அனைத்து திட்டங்களும் வெற்றி பெறுவதற்கான வழிகளும் கற்றுத் தரப்படுகிறது.

ஆர்.சண்முகம், அரியமங்கலம் தொழிற்பேட்டை தொழிற்சங்கத் தலைவர்

 

குறைந்த விலையில் பொருள் விற்க நிறுவன ‘டிரிக்’

விற்பனைக்கு பின்னான சேவையில் மிகுந்த கவனம் செலுத்துகிறோம். பர்னிச்சர்களை தவறாக கையாள்வதாலோ, பிற காரணங்களாலோ ஏற்படும் பழுதுகளை நாங்களே நேரடியாக வாடிக்கையாளரின் வீட்டிற்கே சென்று  சரி செய்து கொடுக்கிறோம்.  எங்களுடைய சொந்த தயாரிப்பு என்பதால் பர்னிச்சர் விலைகளை நாங்கள் பெரும்பாலும் உயர்த்துவதில்லை.

– சூசையப்பர் பர்னிச்சர் மார்ட் உரிமையாளர் ஸ்டீபன்

– சூசையப்பர் பர்னிச்சர் மார்ட் உரிமையாளர் ஸ்டீபன்

 

நாட்டுக்கே பெருமை சேர்க்கணும்…

எந்த ஒரு சூழலிலும் நேர்மையாக நடந்து கொள்வதும், சமூகத்திற்கு பயன்படும் விதமாக வாழ்வதும், தன் நிறுவனத்தின் வளர்ச்சி நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைத்துக் கொள்வதுமே சிறந்த ஒன்று.-

-நாராயணமூர்த்தி, இன்போசிஸ் நிறுவனர்

-நாராயணமூர்த்தி, இன்போசிஸ் நிறுவனர்

 

இவர் ஸ்டைலே வேற-…

நாம் அடுத்தவர்களை வெற்றி பெற வைப்பதன் மூலம் நாம் ஜெயிக்க முடியும். இவர் ஆரம்பத்தில் சேல்ஸ்மேனாக இருந்து பெரும் நிறுவனத்தின் நிர்வாகியாக மாறினார். இவர் தொழிலில் ஏற்பட்ட வீழ்ச்சியிலிருந்து வெற்றிப்பாதைக்கு செல்ல எடுத்துக் கொண்ட முயற்சிகளே கீழ்கண்டவை.

– விஜய்கபூர், டெர்பி ஜீன்ஸ் நிறுவனர்

ஆரம்பத்தில் தொழிலில் ஏற்பட்ட ஏமாற்றத்தை கடின மனதோடு ஏற்றுக்கொண்டு அடுத்த வாய்ப்புகளை ஆராய்ந்தது, தொலைநோக்கு பார்வையுடன் ஒரு தொழிலை அணுகியது, தனது தொழில், சமூகத்திற்கு எவ்வளவு நன்மையளிக்கிறது என்று உணர்ந்து செய்தது, தொழிலில் நஷ்டமடைந்தாலும், அதை நேர்மையாக கையாண்ட விதம், தொழிலில் அடுத்தடுத்து வளர்ச்சிக்கான  சாத்தியக்கூறுகளை நம்பிக்கையுடன் செய்தது.

– விஜய்கபூர், டெர்பி ஜீன்ஸ் நிறுவனர்

 

தோற்றமும் வேணும்…

நீங்கள் எந்த தளத்தில் இயங்க வேண்டுமோ, அதாவது எந்த வேலையில் ஈடுபடுகிறீர்களோ அதற்கேற்பவே உங்களின் தோற்றம் அமைய வேண்டும். ஒருவரின் அழகு, அலங்காரமே அவரின் நடை, பாவனையை வேறுபடுத்திக் காட்டச் செய்கிறது.

-மேகநாதன், -நிறுவனர், ஜாஜில் பிரைடல் ஸ்டுடியோ.

-மேகநாதன், -நிறுவனர், ஜாஜில் பிரைடல் ஸ்டுடியோ.

 

நிறுவனத்தை அடகு வைக்காதீங்க…

‘குறைந்த விலையில் நிறைந்த சேவை’ என்ற வாசகம் தற்போதைய கால சூழ்நிலையில் ஒத்துவராது. அது நம்முடைய நிறுவனத்தை அடகு வைப்பதற்கு சமம். அதனால் தான் நாங்கள் ‘’சரியான விலையில். சிறந்த சேவை’’ என்ற பாதையை தேர்வு செய்து பயணிக்கிறோம். எங்களின் பட்ஜெட்டில் வாடிக்கையாளர்களை  திணிக்காமல் அவர்கள் சொல்லும் பட்ஜெட்டில் சிறந்த திருமண நிகழ்வை செய்து கொடுக்கிறோம்.

ஜாஸ் வெட்டிங் பிளானர் நிறுவனர்கள் வில்ஸ்டன் ஜேம்ஸ், ஜெஸ்டின் ஜெகோஸ்

-ஜாஸ் வெட்டிங் பிளானர் நிறுவனர்கள் வில்ஸ்டன் ஜேம்ஸ், ஜெஸ்டின் ஜெகோஸ்

 

உடைகிற காலத்தில் உடையணும்…

வெற்றி என்பதை விட நிறைவு கொள்வதற்கு மனசு பக்குவப்படுதலே பூரணத்துவம். ஆனால் சமகாலப் போராட்டத்தில் நமது பயணம் வெற்றியைக் குவியப்படுத்தியே அமைந்து விடுகிறது.

– தமிழ்மைந்தன் ஜான் ரிச்சர்டு. கணினி வல்லுநர், அயர்லாந்து.

உடைகிற பருவத்தில் உடைய வேண்டும். -வளைகிற பருவத்தில் வளைய வேண்டும். அந்த உணர்வோடு சிந்தனை, சொல், செயல் இம்மூன்றையும் ஒரு நேர்க்கோட்டில் நிறுத்திவிட்டால் வெற்றி வந்துவிடும். அதை நோக்கிய பயணத்தில் எதிர்படும் தடைகளை உடைத்தலில் கவனம் செலுத்துவதை விட, உழைப்பில் கவனம் செலுத்துவதே போதுமானது. அந்தச் சிந்தனையே நமக்குள் ஒரு புதுப்பிறப்பைத் தரும். அதை நோக்கி இளைஞர்கள் நடைபோட வேண்டும்.

– தமிழ்மைந்தன் ஜான் ரிச்சர்டு. கணினி வல்லுநர், அயர்லாந்து.

 

5

Leave A Reply

Your email address will not be published.