உங்க யூஏஎன் நம்பர் தெரியலையா…? பிஎஃப் விவரங்களை தெரிஞ்சுக்க ஈஸியான ஐடியா இதோ…!
UAN number | பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் உங்களது யூஏஎன் எண்ணை தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை, உங்களது மொபைல் எண் யூஏஎன் கணக்குடன் இணைக்கப்படவில்லை என்றால், அதற்கு சில மாற்று வழிகளும் உள்ளன.
ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் எவ்வளவு பணம் இருப்பு உள்ளது என்பதை தெரிந்துகொள்ள உதவும் இபிஎஃப் வழங்கும் இரண்டு எளிய வழிகளை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது சம்பளம் பெறும் ஊழியர்களிடம் இருந்து குறிப்பிட்ட பணத்தை பிடித்தம் செய்து அவர்களின் அவசரத் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள உதவும் ஓய்வூதிய சேமிப்புத் திட்டமாகும். மேலும், ஒவ்வொரு ஊழியருக்கும் இதற்காக பிரத்யேகமாக 12 இலக்க யுனிவர்சல் அக்கவுண்ட் எண் (UAN) வழங்கப்படும். அந்த எண்ணைப் பயன்படுத்தி ஒருவர் பிஎஃப் கணக்கை அணுகலாம் அல்லது பிஎஃப் கணக்கில் உள்ள பண இருப்பை சரிபார்க்கலாம் அல்லது பணத்தை எடுக்கலாம்.
எனினும், பலர் தங்களது யூஏஎன் எண்ணை நியாபகத்தில் வைத்துக் கொள்வதில்லை. இருப்பினும், யூஏஎன் தெரியாத நபர்களும் தங்களது யூஏஎன் எண்ணை தெரிந்து கொள்ளவும், பிஎஃப் பண இருப்பை சோதித்துப் பார்க்க ஏதுவாக இரண்டு வழிகளை ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் வழங்குகிறது. அதாவது, எளிதாக எஸ்எம்எஸ் அனுப்புவது அல்லது மிஸ்டு கால் கொடுப்பது போன்ற எளிய முறைகள் மூலம் ஒருவர் யூஏஎன் எண் இல்லாமல் பிஎஃப் இருப்பை சரிபார்க்க முடியும்.
யூஏஎன் இல்லாமல் உங்கள் பிஎஃப் இருப்பை சரிபார்ப்பது எப்படி?
- எஸ்எம்எஸ் மூலம் சரிபார்த்தல்
உங்கள் பிஎஃப் இருப்பு விவரங்களை எஸ்எம்எஸ் மூலம் பெற, பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
- உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.
- அதில், பின்வருமாறு டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்: ’EPFOHO UAN (உங்களது விருப்ப மொழி)’. எடுத்துக்காட்டாக:
ஆங்கிலத்தில் தகவலைப் பெற, ”EPFOHO UAN ENG” என அனுப்ப வேண்டும்.
மராத்தியில் தகவலைப் பெற, “EPFOHO UAN MAR” என அனுப்ப வேண்டும்.
இந்த குறியீடுகளைப் பயன்படுத்தி பின்வரும் மொழிகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து, உங்களது பிஎஃப் இருப்பை தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பு: யூஏஎன் உடன் உங்கள் வங்கிக் கணக்கு, ஆதார் மற்றும் பான் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்த சேவை செயல்படும். ஒருவேளை உங்களது யூஏஎன் கணக்குடன் இணைக்கப்படவில்லை என்றால், இந்த சேவையைப் பயன்படுத்துவதற்கு முன்பாக eKYC-ஐ சரிபார்க்க வேண்டும்.
- மிஸ்டு கால் மூலம் சரிபார்த்தல்
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து ஒரு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் பிஎஃப் கணக்கில் உள்ள இருப்பை தெரிந்து கொள்ளலாம்.
- உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணை டயல் செய்யுங்கள்.
- உங்கள் கால் தானாகவே துண்டிக்கப்பட்ட பிறகு, பிஎஃப் இருப்பு விவரங்களுடன் உங்களுக்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.
- மிஸ்டு கால் மூலம் உங்கள் பிஎஃப் இருப்பை சரிபார்க்க உங்களிடம் இருந்து எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது, இந்த சேவை முற்றிலும் இலவசம்.
- உங்கள் யூஏஎன் எண்ணை கண்டுபிடிப்பது எப்படி?
- பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் உங்களது யூஏஎன் எண்ணை தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை, உங்களது மொபைல் எண் யூஏஎன் கணக்குடன் இணைக்கப்படவில்லை என்றால், அதற்கு சில மாற்று வழிகளும் உள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம்.
- உங்கள் நிறுவனத்தின் மூலம்
- உங்கள் மாதாந்திர சேலரி ஸ்லிப்பில் யூஏஎன் எண் குறிப்பிடப்பட்டிருக்கும், அதன்மூலம் தெரிந்துகொள்ளலாம்.
- உங்கள் எச்ஆர் அல்லது அலுவலகத்தின் அட்மின் மூலம் உங்கள் யூஏஎன் எண்ணை தெரிந்துகொள்ளுங்கள்.
உங்களது யூஏஎன் எண்ணை ஆன்லைனில் யூஏஎன் போர்ட்டல் மூலம் மீட்டெடுக்க முடியும். அதற்கு பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
- முதலில், பின்வரும் யூஏஎன் போர்ட்டலுக்கு செல்லுங்கள் – https://unifiedportal-mem.epfindia.gov.in/
- ‘இம்பார்டன்ட் லிங்குகள்’ பிரிவின்கீழ் ‘Know your UAN’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் கேப்ட்சாவை உள்ளிட்டு, ‘Request OTP’ என்பதை கிளிக் செய்யவும்.
- உங்கள் மொபைலுக்கு அனுப்பப்பட்ட ஓடிபிஐ சரிபார்க்க, ‘Validate OTP’ என்பதை கிளிக் செய்யவும்.
- உங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் பின்வருவனவற்றில் ஒன்றை வழங்க வேண்டும். ஆதார், பான் அல்லது உறுப்பினர் ஐடி.
- கேப்ட்சாவை உள்ளிட்டு ‘Show My UAN’ என்பதைக் கிளிக் செய்யவும்.
இதையடுத்து, உங்கள் யூஏஎன் எண் திரையில் காட்டப்படும். இதில், ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், நீங்கள் EPFO உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள EPFO அலுவலகத்தில் பார்வையிடலாம்.