திருச்சி சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வீட்டுத் தோட் டம், மாடித்தோட்டம் மற்றும் ஊட்டச்சத்து காய்கறி தோட்டம் பற்றிய ஒரு நாள் கட்டணப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங் கிணைப்பாளர் முனைவர் ராஜாபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி மாவட்டம், சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் சார்ந்த பயிற்சிகள், நவீன தொழில் நுட்பங்கள், செயல்முறை விளக்கங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஊட் டச்சத்து காய்கறி தோட்டம், மாடித்தோட்டம் மற்றும் வீட் டுத்தோட்டம் குறித்த ஒரு நாள் கட்டணப் பயிற்சி மார்ச் 17ம் தேதி (திங்கள்கிழமை) அன்று நடைபெற உள்ளது.

நமது வீட்டில் காய்கறி தோட்டம் அமைத்து நமக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களுடன் பலதரப்பட்ட மருத்துவ குணங்களைக் கொண்ட காய்கறிகளை நாமே உற்பத்தி செய்து வருடம் முழுவதும் காய் கறிகளை நகர மற்றும் கிராம பொதுமக்கள் பெறும் விதமாக, இப்பயிற்சியில் எளிய முறையில் மாடித்தோட்டம் அமைப்பது குறித் தும், வீட்டின் அன்றாட தேவை களுக்கு ஏற்ப காய்கறி தோட்டம் அமைப்பது குறித்தும் விளக் கம் அளிக்கப்பட உள்ளது. வீட்டிலேயே தயாரிக்கப்படும் காய்கறிகளை உட்கொள்வ தன் மூலம் நமது அன்றாட ஊட்டச்சத்து தேவை பூர்த்தி செய்யப்படுவதோடு ரசாய னம் இல்லாத உணவு கிடைக் கப் பெறுகிறது. இதன் மூலம் இயற்கை முறை உணவுகளை உட்கொள்வதால் உடல்நலம் பாதுகாக்கப்படுகிறது.

பயிற்சிக் கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.590 வசூலிக் கப்படும். பயிற்சி காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ், மதிய உணவு, குறிப்பேடு, பேனா மற்றும் பயிற்சி கையேடு வழங்கப்படும். பயிற்சியாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு வர வேண்டும்.
இதில் பங்கு கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் மார்ச் 14ம் தேதி மாலை 5 மணிக்குள் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 91717 17832 என்ற வாட்ஸ் அப் எண் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.
மேலும், விவரங்களுக்கு 0431-2962854, 9171717832. 9080540412 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.