நீங்கள் செய்யும் முதலீடு இரண்டு மடங்காக திருப்பித் தரப்படும் என தனியார் நிதி நிறுவனங்கள் கூறிய உடன் பலரும் லட்சம் லட்சமாக கொட்டி பிறகு அந்நிறுவனம் ஓடிப் போனதும், போச்சே.. போச்சே என புலம்பியபடி காவல்துறையில் புகார் அளிப்பார்கள்.
ஆனால் இதே போன்றதொரு திட்டத்தை இந்திய தபால் துறை அறிவித்துள்ளது. அய்யய்யோ என பயந்துவிடாதீர்கள். ஏமாற்றிய நிதி நிறுவனங்கள் கூறியது நீங்கள் கொடுக்கும் காசு ஒரே மாதத்தில் இரு மடங்காக திருப்பித் தரப்படும் என்பதே..! ஆனால் தபால் துறை சொல்வது பத்தாண்டுகள் கழித்து தருகிறோம் என்பதே!
அட போப்பா நாங்க சீக்கரம் பணக்காரனாகி, எங்க கஷ்டமெல்லாம் தீர வழி சொல்லுப்பான்னா பத்தாண்டு கழித்தா என அங்கலாய்க்கிறீர்களா உண்மையில் அது தான் சாத்தியம்..! சாத்தியமில்லாத இடங்களில் முதலீடு செய்தால் உங்களது பேராசை நிராசையாகிவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்..!
இந்திய தபால் துறையின் சேமிப்பு திட்டங்களில் ஒன்று கிசான் விகாஸ் பத்திர திட்டம். இத்திட்டத்தின் சிறப்பு அம்சம் உங்களது முதலீடு பத்தாண்டுகளில் இருமடங்காக திருப்பிக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது..!
தற்போது கிசான் விகாஸ் பத்திரத்துக்கு ஆண்டுக்கு 6.9% வட்டி கிடைக்கிறது.
குறைந்தபட்சம் ரூ.1,000த்திலிருந்து முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டுக்கு எந்த வரம்பும் இல்லை. முதலீட்டாளர் 18 வயதை தொட்டிருக்க வேண்டும். தனியாகவும், கூட்டுக் கணக்காகவும் (ழீஷீவீஸீt ணீநீநீஷீuஸீt) திறந்து கொள்ள அனுமதி உண்டு. பாதுகாப்பான முதலீடு வேண்டுமென்றால் தபால் துறை தான் பாதுகாப்பானது.