Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஆக.1 முதல் உயர்கிறது…. ஏடிஎம் பணபரிவர்த்தனை கட்டணம்

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

 

வங்கியில் பணம் டெபாசிட் செய்யவும், எடுக்கவும் கூட்டம் சேர்வதை தடுக்க கொண்டு வரப்பட்ட அறிய வாய்ப்பு தான் ஏடிஎம் மையங்கள். ஆரம்பத்தில் இது வங்கியின் வேலைப்பளுவை குறைப்பதாக அறியப்பட்டது. தொடக்கத்தில் பணம் எடுக்க என அறிமுகப்படுத்தப்பட்ட ஏடிஎம் கார்டு பின்னர் சந்தையில் பொருட்கள் வாங்கவும் பல்வேறு நிதி பரிமாற்றத்திற்கும் இதன் பயன்பாடு விரிவடையத் தொடங்கியது. இச்சேவை வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள விஷயமாக கருதப்பட்டதன் தொடர்ச்சியே கட்டணம் விதிக்கும் முறை கொண்டு வரப்பட்டது.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

டெபிட் மற்றும் கிரடிட் கார்டு மூலம் நடைபெறும் பணபரிவர்த்தனைக்கு ரூ.15 கட்டணம் (interchange fee) விதிக்கப்பட்டது. தற்போது இந்த இண்டர்சேஞ்ச் கட்டணம் தான் ஆகஸ்ட் 1 முதல் ரூ.17ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கான (non-financial transactions)  பரிமாற்றக் கட்டணத்தை ரூ.5-லிருந்து, ரூ.6-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

பிற வங்கி ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க வசூலிக்கப்படும் கட்டணமும் உயர்த்தப்படுகிறது. வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சொந்தமான ஏடிஎம்களில் இருந்து மாதம்தோறும் ஐந்து முறை மட்டுமே பணம் எடுக்க கட்டணம் கிடையாது. பிற வங்கி ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க மெட்ரோ நகரங்களில் மாதத்தில் மூன்று முறையும் மெட்ரோ அல்லாத நகரங்களில் ஐந்து முறையும் எடுக்க கட்டணம் விதிக்கப்படுவதில்லை. அதற்கு மேல் பணம் எடுக்க ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.20 சேவை கட்டணமாக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை ரூ.20லிருந்து ரூ.21ஆக உயர்த்திக் கொள்ள வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இந்த கட்டண உயர்வு 2022 ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.