1 கோடியை தாண்டிய ஈ-ஷ்ரம் பதிவு
அமைப்புசாரா தொழிலாளர்கள் இ-ஷ்ரம் (eshram.gov.in) என்ற வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளும் நடவடிக்கை கடந்த ஆக 26-ஆம் தேதி தொடங்கப்பட்டது. கடந்த 24 நாட்களில் 1,03,12,095 பேர் இந்த வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர்.
சமீபத்திய தரவுகளின்படி பீகார், ஒடிஸா, உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் அதிகளவில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.