திருச்சியில் எலக்ட்ரிக் பைக் REVOLT RV 400 அறிமுகம்!
பெட்ரோல் பயன்பாட்டை தவிர்க்கவும் சுற்றுச்சூழலை காக்கவும் மின்சார வாகன உற்பத்தியில் அனைத்து நாடுகளும் பங்கேற்று மின்சார ஸ்கூட்டர் பைக்ஸ் (motorcycles) மற்றும் கார்கள் தயாரித்து வருகின்றன. இந்தியாவிலும் பல்வேறு முன்னணி மோட்டார் நிறுவனங்களும் பல ஸ்மார்ட் அப் கம்பெனிகளும் மின்சார வாகன தயாரிப்பில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இதன்படி திருச்சியில் முதன்முறையாக முழுமையாக மின்சார (motorcycle) பைக் Revolt நிறுவனத்தின் முற்றிலும் இந்திய தயாரிப்பான RV 400 என்று பைக் அறிமுகம் செய்யப்பட்டது.

MM ECO Motors நிறுவனம் சார்பில் ஏற்கனவே சென்னையில் இரண்டு விற்பனையகங்கள், மதுரை, கோவையை தொடர்ந்து திருச்சியில் தனது 5-வது விற்பனை மையத்தை தொடங்கியுள்ளது.
இந்தியா முழுவதும் 30 விற்பனை மையத்தை நடத்தி வரும் இந்நிறுவனத்தின் தலைவர் மதன் செய்தியாளரிடம் கூறும் போது: இந்த பைக் முற்றிலும் இந்திய தயாரிப்பாக இருந்தாலும் உலகத்தரம் வாய்ந்தது சிறப்பான வடிவமைப்பில் சிகப்பு, கருப்பு, வெள்ளை என்ற 3 கலர்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
இதில் உள்ள 7.5V லித்தியம் அயன் பேட்டரி மூலம் 4 மணி நேரம் சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம். நார்மல், எக்கனாமி, ஸ்போர்ட் என 3 வகை வேகங்களில் பைக்கை இயக்கலாம். ரூபாய் 15 செலவில் 100 கிலோமீட்டர் பயணிக்கலாம் என்று தெரிவித்தார். மேலும் ரிமூவபள் பேட்டரி பயன்படுத்தப்படுவதாகவும் பேட்டரிக்கு 6 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிலோ மீட்டர் வரை வாரண்டி உள்ளதாகவும் தெரிவித்தார்.
தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள இந்த ஷோரூமில் வாகன அறிமுகம் மற்றும் விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. ஷோரூமினை வேலம்மாள் கல்வி அறக்கட்டளை முதன்மை செயல் அலுவலர் வேல்முருகன் திறந்து வைத்தார். திருச்சி நகர போக்குவரத்து உதவி ஆணையர் ஜோசப் நிக்ஸன், தொழிலதிபர் ஜீவானந்தம் ஆகியோர் முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர்.
இவ்விழாவில் மின்சார வாகன பிரியர்கள், நகரின் முக்கிய பிரமுகர்கள், Revolt அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர். நிறைவாக MM ECO மோட்டார்ஸ் நிறுவன தலைவர்கள் மதன் மற்றும் மீனாட்சி மதன் ஆகியோர் நன்றி உரையாற்றினர்.



