எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பராமரிப்பு டிப்ஸ்கள்…
எலக்ட்ரிக் வாகனங்களை தற்போது இந்தியாவில் அதிகம் பேர் வாங்க ஆரம்பித்துள்ளார்கள். பெரிய அளவு நான்கு சக்கர வாகனங்களில் விற்பனை இல்லை என்றாலும் இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த வகை வாகனங்களின் பராமரிப்பு செலவு மிகவும் குறைவு ஆகும். இதன் பராமரிப்பு டிப்ஸ் குறித்து காணலாம்.
பாதுகாப்பான சார்ஜிங்
எப்போதும் உங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பாதுகாப்பான இடத்தில் சார்ஜிங் செய்யுங்கள். பேட்டரி என்பது எலக்ட்ரிக் வாகனங்களில் ஒரு மிகமுக்கியமான ஒரு அம்சம் ஆகும். இதனை சரியாக பராமரிக்கவேண்டும். எப்போது நீங்கள் சார்ஜிங் செய்யும் இடம் பாதுகாப்பான இடமாக இருக்கவேண்டும். முக்கியமாக ஈரமான இடங்களில் சார்ஜிங் செய்யவேண்டாம். ஏதாவது மின் கசிவு ஏற்படும் வாய்ப்பு உளது.
முழு பேட்டரி பயன்படுத்தவேண்டாம்
பேட்டரி அளவை முழுமையாக எப்போதும் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். உதாரணமாக எப்போது உங்கள் பேட்டரி அளவில் 20% முதல் 30% வரை வைத்திருப்பது நல்லது. முழு பேட்டரி பயன்படுத்துவதால் பேட்டரி விரிவாக டேமேஜ் ஆகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
சிறந்த கண்காணிப்பு
உங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எப்போதும் கண்காணித்தபடியே இருங்கள். ஏனென்றால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பவர் ட்ரெயின் பேட்டரி போன்றவை பாதுகாப்பாக இருக்கவேண்டும்.
டயர் பராமரிப்பு
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பெரும்பாலானோர் மறப்பது டயர்களை. இதை அவர்கள் மறக்க முக்கிய காரணம் ஈலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வீட்டிலேயே சார்ஜ் செய்வார்கள். ஆனால் ICE ஸ்கூட்டர் வைத்திருப்பவர்கள் பெட்ரோல் பங்க் சென்று அங்கு பெட்ரோல் நிரப்பும் சமயம் டயர் காற்று அளவை சரிபார்த்துக்கொள்வார்கள். எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பயன்படுத்துபவர்களுக்கு அப்படிப்பட்ட வாய்ப்பு அமையாது.
இதனால் உங்கள் டயர் தேய்மானம் அடைவதோடு உங்கள் ரேஞ்சு பெரும் அளவு குறையும். தற்போது புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பல TPMs எனப்படும் Tyre Pressure Monitor வசதியுடன் கிடைக்கிறது. இதன் உதவியுடனும் டயர் காற்று அளவை தெரிந்துகொள்ளமுடியும்.
ஸ்கூட்டர்களுக்கு ஓய்வு
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பொறுத்தவரை அவ்வப்போது எந்த ஒரு செயலும் செய்யாமல் முழுமையான ஓய்வு அளிப்பது சிறந்தது. தற்போது விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர்களில் Vacation Mode என்ற வசதி உள்ளது. இந்த சமயம் ஸ்கூட்டர் எந்த ஒரு வேலையும் செய்யாமல் ஓய்வில் இருப்பதுபோன்ற இருக்கும். அதில் ஸ்கூட்டரின் பேட்டரி, எலக்ட்ரானிக்ஸ், ப்ளூடூத் போன்றவற்றிற்கு வேலை எதுவும் இல்லாமல் இருக்கும்.