சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், முத்ரா கடனாளிகள் உள்ளிட்டோர் பயனடையும் வகையில் தற்சார்பு இந்தியா தொகுப்பின் ஒரு பகுதியாக அவசரகால கடனளிப்பு உத்தரவாதத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது. அவசரகால கடனளிப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.1.47 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தை பயன்படுத்தாதவர்களும் பயன் பெறும் வகையில் இம்மாதம் (நவம்பர்) 30, 2020 வரை, அல்லது இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் வரை, எது முந்தையதோ அதுவரை இந்தத் திட்டம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.