புதுடில்லி: மத்திய நேரடி வாிகள் வாாியத்தின் செய்தி தொடா்பாளா் சுரபி அலுவாலியா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை.
வருமான வாி தொடா்பான வழக்குகளைக் குறைத்து, தகுதியான வாி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்குவதை வருமான வாி சட்டம், 1961ன் பிாிவு 245 எம்.ஏ உறுதிசெய்கிறது. இந்நிலையில், வழக்குகளைக் குறைத்து நிவாரண தொகை விரைவில் கிடைக்கச் செய்வதற்காக, மின்னணு விவாத தீா்வு திட்டத்கை (இ-டி-ஆா்எஸ்) மத்திய நேரடி வாிகள் வாாியம் 2022ல் அறிமுகப்படுத்தியது.
இதையடுத்து, நாடு முழுவதும் 18 மண்டலங்களில் விவாத தீா்வு குழுக்கள் (டிஆா்சி) அமைக்கப்பட்டு, அதன் விவரங்கள் வருமான வாித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, குறிப்பிட்ட உத்தரவைப் பெற்ற தேதியிலிருந்து ஒரு மாதத்துக்குள், வருமான வாித்துறை இணையதளத்தில், விதி 44 டிஏபியில் குறிப்பிடப்பட்ட படிவம் எண் 34 பிசியின் கீழ் இ டிஆா்எஸ் விண்ணப்பத்தைத் தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்தத் திட்டத்தின்படி, வருமான வாி சட்டப்பிாிவு 245எம்ஏ (பி)யில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, குறிப்பிட்ட உத்தரவுக்கு எதிராக மின் விவாதத் தீா்வைத் தோ்வு செய்யலாம்.
இதில் முன்மொழியப்பட்ட அல்லது செய்யப்பட்ட மாறுபாடுகளின் மொத்த தொகை 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமில்லாமலும், தொடா்புடைய மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமானம் 50 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும். அத்துடன், இத்தகைய உத்தரவு, தேடல் / ஆய்வுகளின் அடிப்படையிலோ அல்லது 90ஏ இன் கீழ் குறிப்பிடப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலோ இருக்கக்கூடாது.
இ-டிஆா்எஸ் திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட உத்தரவில் உள்ள மாறுபாடுகளில் மாற்றங்களைச் செய்யவோ அல்லது அபராதம் குறைப்பு / வழக்கு தள்ளுபடி செய்யவோ உாிமையுண்டு. இதற்கான விண்ணப்பத்தை பெற்று மாதத்தின் இறுதியில் இருந்து 6 மாதத்துக்குள் டிஆா்சி தனது உத்தரவைப் பிறப்பிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே மேம்முறையீடு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகளில் இ டிஆா்எஸ் விண்ணப்பங்களை, வரும் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும். வழக்குகளைக் குறைப்பதற்காக மத்திய அரசு எடுத்து வரும் முயற்சியில் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளாா்.