தங்க நகைகளுக்கு தற்போது “HUID” என்கிற முத்திரை ஏன் ? பழைய தங்க நகைகள், பழங்கால நகைகளின் நிலை என்ன ?
தங்க நகைகளுக்கு தற்போது “HUID” என்கிற முத்திரை பதிக்கப்படுகிறது. இதன் பொருள் மற்றும் அதன் பயன் தான் என்ன? நாம் முன்பு வாங்கிய தங்க நகைகள், பழங்கால நகைகளின் நிலை என்ன?
வீடியோ லிங்
இந்த கேள்விக்கான பதிலை தருபவர்… S.B. செந்தில்குமார், நிர்வாக இயக்குனர், ஸ்ரீ பாலகோபாலன் ஜூவல்லரி மார்ட், மதுரை.
தங்க நகைகளில் தற்போது HUID (HAALMARK UNIQUE IDENTIFICATION) எனும் முத்திரை பதிக்கப்படுகிறது HUID எனும் தனித்துவமான அடையாளம் ஆனது, எண்கள் மற்றும் எழுத்துகள் கொண்ட ஆறு இலக்க எண்ணெழுத்துக் குறியீடு ஆகும். மத்திய அரசானது 2௦21 ஜூலை ௦1ஆம் தேதியில் இருந்து இதனை அமுலுக்குக் கொண்டு வந்துள்ளது.
BIS என்பது BIS சட்டம் 2௦16ன் கீழ் நிறுவப்பட்ட இந்தியாவின் தேசிய தரநிலை அமைப்பாகும். BIS (BUREAU OF INDIAN STANDARDS)ல் பதிவு பெற்ற தங்க நகை விற்பனையாளர்கள் தாங்கள் தயாரித்த தங்க நகைகளை, BISல் அங்கீகரிக்கப்பட்ட ஹால்மார்க் மையங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஹால்மார்க் மையங்கள் நகைகளின் தரம் சரியாக இருக்கும் பட்சத்தில் HUID எனும் ஆறு இலக்க எண்ணுடன் கூடிய முத்திரை பதித்து தங்க நகைக்கான தர உத்திரவாதத்தைத் தருகின்றன.
அந்த ஆறு இலக்க எண்ணினால் என்ன பயன் என்கிற கேள்வி எழலாம். நீங்கள் அந்த ஆறு இலக்க எண்ணினை அதற்குரிய கூகுள் ப்ளே ஸ்டோர் BIS ஆப்பில் பதிவு செய்து தேடினால், அந்த தங்க நகை எந்தக் கடையில் எந்த ஆண்டு மாதம் தேதியில் வாங்கப்பட்டது, அதனைத் தர நிர்ணயம் செய்த ஹால்மார்க் மையம் எது, தங்க நகையின் எடை உட்பட விபரங்கள் தெரிந்து விடும். தற்போது HUID வந்து விட்டதால் பழைய தங்க நகைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
அதே சமயம் அவர்கள் புதிய நகைகளை வாங்க வரும் போது, அதற்கான மதிப்பினைப் பெற்று புதிய HUID முத்திரை பதித்த தங்க நகைகளை வாங்கிக் கொள்ளலாம். தங்கத்தின் மதிப்பானது என்றைக்கும் எப்போதும் குறைவதும் இல்லை. மாறுவதும் இல்லை. மறைவதும் இல்லை.
எழுதியவர் : ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு