தமிழகத்தில் ஒரு ரியல் எஸ்டேட் சொத்தைத் வாங்க வேண்டும் எனில், அதிகம் செலவிட வேண்டும். சொத்தைப் பதிவு செய்ய மட்டுமே சொத்தின் மதிப்பில் 11% தொகையை (முத்திரைத் தாள் கட்டணம் 7% மற்றும் பதிவுக் கட்டணம் 1%) அரசுக்குச் செலுத்த வேண்டும்.
இது தவிர, ரியல் எஸ்டேட் தரகருக்கு கமிஷன் 2% மற்றும் இதர செலவுகள் இருக்கின்றன. இவற்றை எல்லாம் சேர்த்தால் சொத்தின் மதிப்பில் சுமார் 15% வரும். இந்த சதவிகிதத் தொகை சொத்தின் மதிப்பில் அதிகரித்தால் மட்டுமே சொத்தில் செய்யப்படும் முதலீடு லாபத்துக்கு வரும்.
இவை தவிர, வீடு என்கிறபோது சொத்து வரி, குடிநீர் இணைப்பு, பாதாளச் சாக்கடை, பராமரிப்புச் செலவுகள் அதிகம் இருக்கின்றன. மேலும், வீடு கட்டுமானத்துக்கு அரசு விதிமுறைகளைப் பின் பற்றுவது அவசியம். அப்ரூவல், குடிநீர் இணைப்பு, பாதாளச் சாக்கடை இணைப்பு போன்றவற்றுக்கே பெரும் தொகை செலவாகும்