திருச்சியில் தயாராகும் பிரத்யேக ஹேர் ஆயில் – உலகம் முழுதும் வாடிக்கையாளர்கள் (வீடியோ)
பாட்டியின் ஐடியா பேத்திக்கு வருமானம்
பிராண்டு, பெயர் இல்லாமல் விற்பனையான பொருள் இன்று உலகம் முழுக்க வாடிக்கை யாளர்களை சம்பாதித்து தந்துள்ளதாக கூறும் LOMAN HAIR CARE உரிமையாளர் ஸ்ரீ சுருதி கிஷோர்குமாரை சந்தித்து, “எப்படி இது சாத்திய மானது..? என்று கேள்வி எழுப்பினோம். அப்போது அவர் கூறுகையில்,
“சிறு வயது முதலே சுயதொழில் செய்யவேண்டும் என்ற உந்துதல் எனக்குள் இருந்து வந்தது. திருமணத்திற்கு பிறகு அந்த எண்ணம் வேகம் எடுத்தது. எந்த தொழிலில் ஈடுபடலாம் என்று யோசித்தபோது தான் எங்க பாட்டி சொல்லிக் கொடுத்த HAIR OILதயாரிப்பு ஞாபகம் வந்தது. இன்று வரையில் அந்த ஹேராயில் தான் எங்கள் வீட்டில். அதையே தொழிலாக செய்வோம் என்ற முடிவு செய்தேன்.
2019ம் ஆண்டு சிறிய அளவில் எந்த பிராண்டும் இல்லாமல் செய்யத் தொடங்கினேன். அந்நேரத்தில் MSME™ இருந்து கண்காட்சிக்கான அழைப்பு வந்தது. எந்த பிராண்டும் இல்லாத வெறும் பாட்டிலில் HAIR OIL–ஐ டிஸ்பிளேயில் வைத்தேன். 2 நாட்களில் 20 பாட்டில்கள் விற்பனையானது. அதன் பிறகே இந்த தொழிலில் நம்மால் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை வந்தது. இதையடுத்தே LOMAN HAIR CARE என்ற பிராண்டில் ஆயில்களை தயாரித்து மார்க்கெட் செய்ய ஆரம்பித்தேன்.
எங்கள் HAIR OIL தயாரிப்பு முறையைப் பொருத்தவரையில், கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, செம்பருத்தி, கற்றாலை, கருவேப்பிலை, விளக்கெண்ணை, வேப்பிலை உள்ளிட்ட பொருட்களை அறைத்து திரவநிலையாக்கி தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து நீண்ட நேரம் காய்ச்சி எடுக்கவேண்டும்.
மற்றொரு முறையைப் பொருத்த வரையில் மேற்கண்ட பொருட்களை பொடியாக்கி பின்னர் எண்ணெயுடன் சேர்ந்து காய்ச்சுவது. எங்கள் ஆயிலை பயன்படுத்தினால் 98 சதவீதம் முடிக்கொட்டுதல் குறையும். எந்த ஒரு பக்கவிளைவுகளும் இருக்காது.
கர்ப்பிணிப் பெண்கள் எங்கள் ஆயிலை பயன்படுத்தினால் முடிக்கொட்டுதல் இருக்காது. 100ml ஹேராயில் ரூ.150 மட்டுமே. தற்போது, தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் எனக்கு 1000 வாடிக்கையாளர்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு, சுயதொழில் என்பது பெண்களுக்கு மிகவும் முக்கியமானது. தொழில்முனைவோருக்கான முக்கியத்துவம் குறித்து கல்லூரிகளில் உரையாடல்களை மேற்கொண்டு வருகிறேன் என்றார்.
-இப்ராகிம்