Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் கண் மற்றும் இரத்ததான RBD (Rotary Blood Donors) குழு ஆரம்பித்தல் விழா

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் கண் மற்றும் இரத்ததான RBD (Rotary Blood Donors) குழு ஆரம்பித்தல் விழா

75வது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, பாரதிதாசன் பல்கலைக்கழக மனித மேம்பாட்டு துறை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் பட்டர்பிளை இணைந்து மாபெரும் பேரணி கண் மற்றும் இரத்ததான குழு ஆரம்பித்தது.

இவ்விழாவில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இவ்விழாவின் பேரணியை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் மதிப்பிற்குரிய Dr. M. செல்வம் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

வீடியோ லிங்:

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் செய்யக்கூடிய அறுவைச் சிகிச்சைகளுக்கு சுமார் 200 யூனிட்டுக்கு மேற்பட்ட இரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் போதுமான அளவு இரத்தம் கிடைப்பதில்லை. நிறைய தன்னார்வ நிறுவனங்கள் உதவி செய்ய முற்பட்டாலும் அதை சரிவர நிவர்த்தி செய்ய முடிவதில்லை. எனவே இதை மனதில் கொண்டு இரத்தம் கேட்பவர்க்கும் கொடுப்பவர்க்கும் இலகுவாக முறைப்படி சேவை செய்ய ரோட்டரி RBD என்னும் குழுமம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.

இதில் கல்லூரிகளில் உள்ள ரோட்ராக்டர்ஸ் NSS மாணவர்கள் மற்றும் இரத்ததானம் செய்ய விரும்பும் ரோட்டரி உறுப்பினர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். இக்குழுவில் மக்களுக்கு தேவையான அனைத்துவகை இரத்தமுடையவர்கள் உள்ளனர். ஆகவே யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் இரத்தம் தேவைப்பட்டால் இந்த RBD குரூப்பில் post செய்தால் உடனடியாக இரத்தம் கொடுக்க இந்த குழு தயாராக உள்ளது. ஆகவே இது மக்களுக்கு சென்றடையும் நோக்கத்தில் RBD (Rotary Blood Donors) தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், போலீஸ் துணை ஆணையர் V. அன்பு  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு இரத்ததானம் மற்றும் கண்தானம் பற்றியும்,  போக்குவரத்து விதிகளை பின்பற்றுதல், காவல் உதவி ஆப்பை பயன்படுத்துவது குறித்தும் மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இதை Rotary மாவட்டம் துணை பயிற்சியாளர் Rtn .S.R செந்தில் அவர்களும் மாவட்ட செயலாளர் Rtn.R.B.S. மணி அவர்களும் தொடங்கி வைத்தனர். மேலும் அனைத்து மாணவர்களும் கண்தானம் செய்வதாக உறுதிமொழி எடுத்தனர்.

இவ்விழாவில் Registrar பாரதிதாசன் பல்கலைக்கழகம் Dr. கணேசன் கலந்து கொண்டார். மேலும் மாநில மனித மேம்பாட்டு துறை அதிகாரி Dr. M. செந்தில்குமார். மாவட்ட மனித மேம்பாடு துறை அதிகாரி Dr. லெட்சுமி பிரபா அவர்களும், A. Rtn.மோகன் மற்றும் Rin.எழில் அவர்களும் சிறப்புரையாற்றினர்.

வீடியோ லிங்:

இவ்விழாவில் ஜோசப் கண் மருத்துவமனை இயக்குநர் Dr. பிரதிபா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். ரோட்டரி கிளப் ஆப் பட்டர்பிளை தலைவர் திருமதி. சுபத்ரா அவர்கள் நன்றி கூறினார் இந்நிகழ்ச்சியை ஜோசப் கண் மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி சுபாபிரபு அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.