சத்தீஸ்கரை பார்த்து கத்துக்கோங்க ஸ்டாலினுக்கே விவசாயிகள் அறிவுரை!
சத்தீஸ்கர் மாநிலத்தை பார்த்து நீங்களும் கத்துக்கோங்க என்று தமிழக முதல்வர் ஸ்டாலினை விவசாயிகள் சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகலை சந்தித்து அவருக்கு நன்றி தெரிவிப்பதற்காக தஞ்சாவூரில் இருந்து ரயில் மூலம் புறப்பட்டு சென்றனர்.
இந்தியாவில் உள்ள இத்தனை மாநிலங்களை விடுத்து சட்டீஸ்கர் மாநில முதல்வருக்கு விவசாயிகள் நன்றி தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்று விவசாயிகள் சங்க முக்கிய நிர்வாகிகளை கேட்டபோது இந்தியாவிலேயே முதல்முறையாக சத்தீஸ்கர் மாநிலத்தில் தான் நெல் கொள்முதல் ஆதார விலை நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது.
அதேபோல கரும்புக்கான கொள்முதல் ஆதார விலையும் சத்தீஸ்கர் மாநிலத்தில் தான் அதிகம்.
அதேபோல விவசாயிகளுக்கு தேவையான உர மானியம் போன்றவற்றையும் சத்தீஸ்கர் மாநிலம் வழங்கி வருகிறது.
அவர்களுக்கு வழங்கும் சலுகைகளையும் முறைப்படி அவ்வப்போது உடனுக்குடன் வழங்கி வருகிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டீஸ்கர் மாநிலத்தை பின்பற்றி அவர்கள் கடைபிடிக்கும் வழிமுறைகளை விவசாய திட்டங்களை நமது மாநிலத்திலும் அமல்படுத்த வேண்டும் என்றனர்.
தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு குழுவானது சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் அவர்களை சந்தித்து உரையாடவும் திட்டமிட்டுள்ளனர்.