16,500 பேருக்கு மான்யத்துடன் இலவச பின்னலாடை பயிற்சி
மத்திய அரசின் ஜவுளித்துறை சார்பில் 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ‘சமர்த்’ திட்டமானது கொரோனா ஊரடங்கு காரணமாக முழுமையாக செயல்படுத்த முடியாமல் போனது.
இந்த ஆண்டு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் மூலம் 16,500 பேருக்கு பயிற்சி அளித்து அவர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்ய மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.
அதன்படி 18 வயது நிரம்பிய வேலை இல்லாதோர் யாராக இருப்பினும், ‘சமர்த்’ திட்டத்தின் மூலம் 45 நாட்கள் மானியத்துடன், பின்னலாடை தொழில் கற்று, மத்திய அரசு சான்றுடன் கட்டாய வேலைவாய்ப்பை பெறலாம்.
வெளிமாவட்டம் மற்றும் மாநிலத்தைச் சேர்ந்த வர்கள் இந்த இலவச தொழிற் பயிற்சியில் சேர்ந்து பயனடையலாம்” என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் தெரிவித்துள்ளார்.