உலக சிறுநீரக தினந்தையொட்டி திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்!
உலக சிறுநீரக தினந்தையொட்டி திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்!
உலக சிறுநீரக தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 2-வது வியாழக்கிழமை கொண்டப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப் படுகிறது.
சிறுநீரகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், உலகளவில் சிறுநீரக நோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய உடல்நலப் பிரச்சனைகளின் தாக்கத்தைக் குறைக்கவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருச்சியில் சிறுநீரக தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனை பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாமினை நடத்தி வருகின்றது. அதேபோல், தற்போது இந்தாண்டு 9.03.2023 முதல் 11.03.2023 வரை இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்க உள்ளது.
இம்முகாமில், சிறுநீரக சிறப்பு மருத்துவர் மற்றும் மாற்று சிறுநீரக மருத்துவ நிபுணர் டாக்டர். S. கணேஷ் அரவிந்த் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். N.கார்த்திகேயன் ஆகியோரால் இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக தொற்று நோய்கள், சிறுநீரக திசு பரிசோதனை, சிறுநீரக கல் தொந்தரவு, சிறுநீரக புற்றுநோய், மற்றும் அனைத்து விதமான சிறுநீரக பிரச்சனைகளுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்களுக்கு காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை மற்றும் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் இரத்த சுத்திகரிப்பு மற்றும் Renal Transplant செய்யப்பட்டு வருகிறது. இதுமட்டுமன்றி அனைத்து தனியார் காப்பீடு வசதிகளும் செய்து தரப்படுகிறது.
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் 0431-2716666 மற்றும் 84899 12738 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.