திருச்சியில் வரும் ஞாயிறு இலவச இன்னிசை கச்சேரி! பாடகர் மனோ, சைலஜா, சூப்பர்சிங்கர் பாடகிகள் பங்கேற்பு
திருச்சியில் வரும் ஞாயிறு இலவச இன்னிசை கச்சேரி!
பாடகர் மனோ, சைலஜா, சூப்பர்சிங்கர் பாடகிகள் பங்கேற்பு
தமிழ்கல்ச்சுரல் அகாடமி, மௌனராகம் இசைக்குழு மற்றும் விளம்பரதார்கள் உறுதுணையுடன் வரும் ஞாயிறு 19ந் தேதி மாலை 6 மணியளவில் திருச்சி ஏர்போர்ட் மொரைஸ் சிட்டி வளாகத்தில் கோடை இசை எனும் Mega Musical Contest ஒன்று நடைபெறுகிறது.
இதுகுறித்து, செய்தியாளர்கள் சந்திப்பு ஹோட்டல் பிளாஸ்ஸமில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழ்கல்ச்சுரல் அகாடமி தலைவர் ஆரோக்கியராஜ் ஜெகநாதன், அமெரிக்க தமிழ் சங்கத்தலைவர் மூத்தப்பத்திரிக்கையாளர் பிரகாஷ் M.சுவாமி, மார்க் அமைப்பின் இயக்குநர் வெங்கடேசன்பிரபு, இப்ராகிம், மலேசியன் டூரிசம் அமைப்பின் மார்க்கெட்டிங் மேனேஜர் கவிதா, முற்போக்கு சிந்தைனையாளர் சாதனா, மொரைஸ் சிட்டி சார்பில் பிரபு மைக்கேல், திருச்சி சொக்கலிங்கம் உள்பட பலர் கூட்டாக கூறும் போது,
வணிகநோக்கம் இல்லாமல் இலவச அனுமதியுடன் நடக்கும் இந்நிகழ்ச்சியில் சுமார் 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் இசை ரசிகர்களை எதிர்ப்பார்க்கிறோம். இசை ஆர்வலர்கள் முழுமையான மனநிறைவுடன் செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.
கொரோனா காலக்கட்டத்தை கடந்த மக்களின் மனநிலையை உற்சாகமாக மாற்ற இந்த இசை நிகழ்ச்சி உதவும். மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். இந்த இன்னிசை நிகழ்ச்சியில் பாடகர் மனோ, பாடகி சைலஜா, சூப்பர் சிங்கர் புகழ் மாளவிகா உள்பட பல முன்னணி பாடகர், பாடகிகள் பங்கேற்க உள்ளனர்.
தனித்தனியாக 4 வாயில்கள் அமைக்கப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும், முதலுதவி, ஆம்புலன்ஸ், தற்காலிக கழிவறை, கேண்டீன் உள்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இருக்கைகள் தரப்படும். மாலை 5 மணி முதலே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஒளி வெள்ளத்தில் நடக்கும் இந்த இசை நிகழ்ச்சி மக்களின் மனஇறுக்கத்தை போக்கி மகிழ்வான மனநிலைக்கு மாற்றும் என்றும் தெரிவித்தனர்.