ஈஎம்ஐ திட்டத்தில் தங்கம்..!
கொரோனா பாதிப்பினால் சர்வதேசச் சந்தையில் தங்கம் மீதான முதலீடுகள் அதிகரித்த காரணத்தால் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது. தீபாவளி பண்டிகை வரை தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. சாமான்ய மக்கள் தங்கத்தின் பக்கம் தலை திருப்பவே முடியவில்லை. என்றாலும் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் தங்கம் முக்கிய பங்கு வகிப்பதால் அவர்கள் பெரும் திணறலிற்கும் தள்ளப்பட்டனர்.
இதையறிந்த ஆன்லைன் தங்க நகை விற்பனை நிறுவனமான ப்ளூஸ்டோன் குறைந்த கால தவணை திட்டத்தின் கீழ் தங்க நகைகளை விற்க களமிறங்கியுள்ளது. ஈஎம்ஐ திட்டத்தின் கீழ் தங்க நகை வாங்குவோருக்கு முதல் மாத தவணையில் 50 சதவீத தள்ளுபடியை கொடுக்கிறது.
ஈஎம்ஐ சேவையைப் பெற முதலில் வாடிக்கையாளர்கள் தங்க வைப்பு நிதியில் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். டெபாசிட் தொகை குறிப்பிட்ட தொகையை அடைந்த பின்பு இந்த ஈஎம்ஐ சேவையை ப்ளூஸ்டோன் கொடுக்கிறது.
ப்ளூஸ்டோன் ஜூவல்லரி ஈஎம்ஐ திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர் 12, 11 அல்லது 10 மாதம் ஈஎம்ஐ சலுகை கொடுக்கப்படும், ஆனால் வாடிக்கையாளர் 10 அல்லது 11 மாதம் ஈஎம்ஐ மட்டுமே செலுத்தினால் போதும். கடைசி மாதம் ஈஎம்ஐ தொகையை நகை கடையே ஏற்றுக் கொள்ளும்.