மூத்த குடிமக்களுக்கு இனிப்பான செய்தி
ஆர்பிஐ வட்டி விகிதத்தை உயர்த்தியதை அடுத்து, வங்கிகளும் டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது இந்தியாவில் செயல்படும் சிறிய மற்றும் பெரிய வங்கிகள் அனைத்தும் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. பணவீக்க விகித, விலைவாசி உயர்வு ஆகியவற்றின் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 6.25 சதவிகிதமாக கடந்த வாரம் உயர்த்தியது.
ஆர்பிஐ வட்டி விகிதத்தை உயர்த்தியதை அடுத்து, வங்கிகளும் டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது. இதுமட்டும் இல்லாமல் வங்கிகள் கடன் வழங்கும் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் வங்கிகளின் டெபாசிட் வளர்ச்சி பெரிய அளவில் இல்லை. இதனால் வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவதற்கான தேவையை நிறைவேற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கி போன்ற பெரிய வங்கிகள் உட்பட பல வங்கிகள், 2022ம் ஆண்டு மே மாதம் தங்களின் நிலையான வைப்பு வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கடைசியாக 2022ம் ஆண்டு அக்டோபரில் 2 கோடி ரூபாய் வரையிலான நிலையான வைப்பு நிதிக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியது.
டெபாசிட்டுக்கான வட்டி விகிதம்
எஸ்பிஐ 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 3 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதேபோல், 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை முதிர்ச்சியடையும் வைப்பு நிதிக்கான வட்டியை 4.50 சதவீதமாகவும், 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 5.25 சதவீதமாக உயர்ந்துள்ளது.
211 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்குள் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 5.50 சதவீதம் என அறிவித்துள்ளது. மேலும் ஒரு வருடம் முதல் இரண்டு வருடங்களுக்கும் குறைவாக உள்ள டெபாசிட்டுக்கு 6.10 சதவிகிதம் வட்டி வழங்குவதாக அறிவித்துள்ளது.
இரண்டு வருடங்கள் முதல் மூன்று வருடங்களுக்கும் குறைவான ஃபிக்ஸ்ட் டெபாசிட்டு, 6.25 சதவிகிதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூன்று வருடங்கள் முதல் ஐந்து வருடங்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்பு நிதிக்கு, வட்டி விகிதம் 6.10% என்றும், ஐந்து ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் வைப்பு நிதிக்கு வட்டி விகிதம் 6.10% என்று தெரிவித்துள்ளது.
மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம்
அனைத்து வங்கிகளும் மூத்த குடிமக்களின் டெபாசிட்டுக்கான வட்டியை அதிகமாக வழங்கும். ஏனெனில் பிக்ஸ்ட் டெபாசிட் திட்டங்களில் அதிகம் முதலீடு செய்பவர்கள் மூத்த குடிமக்களாகவே உள்ளனர். ஏனெனில் நிலையான வருமானம் அதே நேரத்தில் ரிஸ்க் இல்லாத முதலீட்டையே மூத்த குடிமக்கள் விரும்புகின்றனர்.
எஸ்பிஐ வங்கி மூத்த குடிமக்கள் மேற்கொள்ளும் டெபாசிட்டுகளான வட்டி விகிதத்தை 50 புள்ளிகள் வரை அதிகரித்துள்ளது. இதுமட்டும் இல்லாமல் மூத்த குடிமக்களுக்கு தேவையான வகையில் சிறப்பு டெபாசிட் திட்டங்களையும் எஸ்பிஐ உள்பட பல வங்கிகள் வைத்துள்ளன.
எஸ்பிஐ 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 3.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதேபோல், 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை முதிர்ச்சியடையும் வைப்பு நிதிக்கான வட்டியை 5 சதவீதமாகவும், 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 5.75 சதவீதமாக உயர்ந்துள்ளது.
211 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்குள் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 6 சதவீதம் என அறிவித்துள்ளது. மேலும் ஒரு வருடம் முதல் இரண்டு வருடங்களுக்கும் குறைவாக உள்ள டெபாசிட்டுக்கு 6.60 சதவிகிதம் வட்டி வழங்குவதாக அறிவித்துள்ளது.
இரண்டு வருடங்கள் முதல் மூன்று வருடங்களுக்கும் குறைவான ஃபிக்ஸ்ட் டெபாசிட்டு, 6.75 சதவிகிதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூன்று வருடங்கள் முதல் ஐந்து வருடங்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்பு நிதிக்கு, வட்டி விகிதம் 6.90% என்றும், ஐந்து ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் வைப்பு நிதிக்கு வட்டி விகிதம் 6.90% என்று தெரிவித்துள்ளது.