ஓலா, உபோ் நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
Ola, uber போன்ற கார்ப்பரேட் கால் டாக்ஸி பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. அதேபோல், இந்த கார்ப்பரேட் கால் டாக்ஸியின் கட்டண சேவை குறித்த புகார்களும் எழுந்த வண்ணம் உள்ளது.
ஓலா, உபேர் மலிவான விலையினால் ஏராளமான வாடிக்கையாளர்களை சம்பாதித்தது. இதனால் பல ஓட்டுநர்களும் தங்கள் கார்களை இந்த கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைத்தனர்.
பொபைல் ஆப் மூலம் சவாரிகளை பெறும் கார்ப்பரேட் நிறுவனம் தனக்கான கமிஷனை எடுத்து கொண்டு மீதம் உள்ள தொகை கார் ஓட்டுநர்களுக்கு வழங்கி வருகிறது.
கார் டிரைவர்கள் புக்கிங் செய்த பிறகு தனக்காக கமிஷன் தனியாக தரவேண்டும் எனவும் தர மறுத்தால் கேன்சல் செய்து விடுவதாகவும், மேலும் பயன்பாடு நேரத்தை வைத்து வாடகை நிர்ணயிப்பது போன்ற புகார்கள் வந்து கொண்டே இருந்தது.
இந்நிலையில், நுகர்வோர் விவகாரத்துறைத் தலைவர் ரோஹித் குமார் சிங் இதுகுறித்து இத்துறை சார்ந்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் நியாமற்ற முறையில் கட்டணம் வசூலிப்பது நுகர்வோர் துறையால் ஏற்றுக்கொள்ளபட மாட்டாது. அனைத்து நேரங்களிலும் ஒரே கட்டணமாக வைக்க வேண்டும் மற்றம் வாடிக்கையாளர்களின் புகார்கள் குறித்து விரைவில் உரிய தீர்வு காண வேண்டும் இல்லையென்றால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என எச்சரித்துள்ளார்.