திருச்சியில் ஆட்டோ டிரைவர்களின் வரப்பிரசாதம் HAPPY METER AUTO..!
திருச்சி, காஜாமலைப் பகுதியில் முகமது முசா, களந்தர் இப்ராஹிம், இணையதுல்லா ஆகிய மூவரும் இணைந்து, ஆட்டோ ஓட்டுனர்கள் 200 பேர் கொண்ட ஒரு வாட்ஸ்அப் குரூப் ஆரம்பித்து மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் குறைவான கட்டணத்தில் ஆரம்பித்தது தான் HAPPY METER AUTO..!.
இது குறித்து முகமது முசா நம்மிடம் கூறுகையில், “ஓலா ஆட்டோவில் ரூ.100 சவாரிக்கு சென்றால் முழுவதும் டிரைவர்களுக்கு சேராது. கமிஷன் கொடுக்க வேண்டும். ஆனால் எங்களது மீட்டர் ஆட்டோவில் சவாரி சென்றால் கட்டணம் முழுதும் டிரைவருக்கே. முன்பெல்லாம் நாங்கள் சம்பாதிக்கும் ரூ.1,000-ல் ரூ.200-ஐ கமிஷன் கொடுக்க வேண்டி இருந்தது.
வீடியோ லிங்
எவ்வளவு நாள் இப்படி வாழ்வது என யோசித்த நாங்கள் எங்கள் வாட்ஸ்ஆப் குரூப் மூலம் ஆரம்பித்தது தான் இந்த HAPPY METER AUTO..!. எங்கள் HAPPY METER AUTO..!ல் கட்டணமாக 2.4 கி.மீ-க்கு ரூ.40-ம், அடுத்தடுத்த 1 கி.மீ. ரூ.15 என கட்டணம் உயரும். போன் செய்தால் போதும் அடுத்த 10 நிமிடத்திற்குள் ஆட்டோ ஏற்பாடு செய்து தருகிறோம். கிட்டத்தட்ட 200 ஆட்டோ டிரைவர்கள் எங்களது குரூப்பில் இணைந்துள்ளனர்.
வீடியோ லிங்
ஓரளவு நன்றாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. திருச்சி மக்கள் எங்களுக்கு முழு ஆதரவு தரவேண்டும் என்பதே எங்களது விருப்பம்” என்றார். தொடர்ந்து பேசிய களந்தர் இப்ராஹிம் நம்மிடம். “நாங்கள் மூவரும் இணைந்தே நோட்டீஸ் அடித்துக் கொடுத்தும், கார்டு கொடுத்தும், விளம்பரப்படுத்தி வருகிறோம். வேறு எந்த டிரைவரிடமும் சந்தாவோ, கட்டணமோ வசூலிக்கவில்லை. ஆட்டோ டிரைவர்கள் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர்.
இணையதுல்லா கூறுகையில், “ஆன்ராய்டு போன் இருந்தால் தான் ஓலா ஆட்டோ புக் செய்ய முடியும். ஆனால் எங்களிடம் அப்படி இல்லை பட்டன் போன் வைத்துள்ளவர்கள் கூட ஆட்டோ புக் பண்ணலாம்.
93845 -67800 என்ற எண்ணிற்கு நீங்கள் அழைத்தால் அடுத்த 10 நிமிடத்தில் ஆட்டோ உங்கள் இருப்பிடத்திற்கு வரும். வந்தவுடன் டிரைவர் மீட்டரை ஆன் செய்து உங்களிடம் காண்பிப்பார். பின்னர் சவாரி முடிந்தவுடன் மீட்டரை செக் செய்து பணத்தை பெற்றுக் கொள்வார்.
– அஸ்வின், எபி