அதிக லாபம் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்!
தபால் அலுவலகங்களில் வங்கிகள் போன்றே சேமிப்புக் கணக்குகள் உள்ளது. அதோடு தபால் அலுவலகம் 4 சதவீதம் லாபத்தினைத் தனிநபர் மற்றும் ஜாயிண்ட் சேமிப்புக் கணக்குகளுக்கு அளிக்கிறது. சேமிப்புக் கணக்குகளில் பணத்தினை டெபாசிட் செய்ய மற்றும் எடுக்க அருகில் உள்ள தபால் அலுவலகங்கள் மூலமாகச் செய்ய முடியும். போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்டுகளில் 6.7% வரை வட்டி கிடைக்கின்றது. இது மிக பாதுகாப்பான ஒரு முதலீடாகவும் சேமிப்பாகவும் பார்க்கப்படுகிறது. இங்கு 1, 2, 3, 5 வருடங்கள் வரை டைம் டெபாசிட் உண்டு. 5 வருட டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது பிரிவு 80சி கீழ் விலக்கு உண்டு. அதே போல இந்த திட்டங்களுக்கு ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறையும் அரசு வட்டி விகிதத்தினை மாற்றியமைக்கிறது. எனினும் வருடத்திற்கு ஒருமுறை தான் வாடிக்கையாளர்களுக்கு பலன் வழங்கப்படுகிறது.
இந்திய தபால் துறையில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்களில், மிக முக்கியமான திட்டம் கிசான் விகாஸ் பத்திரம். சிறு முதலீட்டாளர்களுக்கு மிகவும் லாபகரமான மற்றும் பாதுகாப்பான ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் சேமிக்க விரும்புவர்கள் குறைந்தபட்சம், ஆயிரம் ரூபாய் முதல் முதலீடு செய்து கொள்ளலாம். அதிகபட்ச முதலீடு என இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
18 வயது பூர்த்தியடைந்த எந்த ஒரு இந்தியக் குடிமகனும் இந்த திட்டத்தில் சேமிக்கத் தகுதி பெற்றவர்கள் தான். இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய வங்கிக் கணக்கு தேவையில்லை.
கிசான் விகாஸ் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம் சென்று, தங்களது அடையாள மற்றும் முகவரி ஆவணங்களைச் சமர்ப்பித்துச் சேமிப்பைத் துவங்கலாம். மைனர் பெண் அல்லது சிறுவர்களின் பெயரில், அவரது பெற்றோர் மற்றும் காப்பாளர்கள் முதலீடு செய்யலாம்.
மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்கென கொண்டு வரப்பட்ட அசத்தலான திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். இந்த திட்டம் மைனர் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது.
ஒரு குழந்தையின் பிறப்பு முதல் 10வயது வரை எந்த நேரத்திலும் இந்த எஸ்எஸ்ஒய் கணக்கை துவக்க முடியும். இதன் முதிர்வு காலம் 21 வருடமாகும். இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் காலண்டுக்கு ஒரு முறை அரசால் மாற்றம் செய்யப்படும். இது முதலீட்டுக்கு பங்கமில்லாமல், கணிசமான லாபத்தினை கொடுப்பதால், பெண் குழந்தைகளின் வருங்காலத்திற்கு உதவியாக இருக்கும்