CB1000F பைக் பிரேம் ஹார்னெட் பைக்கைப் போலவே இருந்தாலும், இதற்கு புதிய சப்ஃப்ரேம் வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் உயரம் 795 மிமீ ஆகும், இது ஹார்னெட்டை விட 14 மிமீ குறைவாக இருந்தாலும், சவாரி செய்வதற்கு மிகவும் வசதியாக அமைகிறது.

ஹோண்டா மோட்டார் நிறுவனம் தனது புதிய CB1000F நியோ-ரெட்ரோ மோட்டார் சைக்கிளை அதிகாரப்பூர்வமாக சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கானது கிளாசிக் தோற்றம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் கலவையைக் கொண்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு மாடலாக காட்டப்பட்ட இந்த பைக்கானது, தற்போதுள்ள CB1000 ஹார்னெட்டின் அதே பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டது. மேலும், சவாரி அனுபவத்தை வித்தியாசமாக்கும் வகையில் அதன் எஞ்சின் மற்றும் பிற காம்பௌண்ட்கள் சிறப்பாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
ஹோண்டா CB1000F பைக்கில் 1000 சிசி திறன் கொண்ட 4 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஹோண்டா அதில் பல மாற்றங்களைச் செய்துள்ளது. குறிப்பாக, எஞ்சின் கேம்ஷாஃப்ட், ஏர்பாக்ஸ் மற்றும் எக்ஸாஸ்ட் சிஸ்டம் ஆகியவை மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த எஞ்சின் ஆனது 9000 rpm இல் 123.7 hp பவரையும் மற்றும் 8000 rpm இல் 103 Nm பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இது CB1000 ஹார்னெட்டை விட சற்று குறைவான சக்தியை வழங்கினாலும், குறைந்த rpm இல் அதிக சக்தியை வழங்குகிறது. அதாவது ஹார்னெட்டில் 11,000 rpm இல் 157 hp பவரையும் மற்றும் 9000 rpm இல் 107 Nm பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது.


