ஆன்லைனில் பணபரிமாற்றத்தில் தவறு நிகழ்ந்தால்…
ஆன்லைன்மூலம் நாம் பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்யும்போது அந்தப் பணத்தைப் பெறுபவருடைய வங்கிக் கணக்கு தொடர்பான மேலே சொல்லப் பட்ட விஷயங்களைத் தவறுதலாகக் குறிப்பிட்டு டிரான்ஸ்ஃபர் செய்கிறீர்கள். உடனே உங்கள் வங்கிக் கணக்கில் பணம் கழிக்கப்படுகிறது.
ஆனால், நீங்கள் குறிப்பிட்டபடி, ஒரு வங்கிக் கணக்கு எண்ணோ, யு.பி.ஐ ஐடியோ இல்லவே இல்லை எனில், நீங்கள் டிரான்ஸ்ஃபர் செய்த பணம் உங்கள் வங்கிக் கணக்குக்கே ஒன்றிலிருந்து மூன்று நாள்களுக்குள் மீண்டும் தானாகவே கிரெடிட் ஆகிவிடும். அப்படி ஆகவில்லை எனில், நீங்கள் உங்கள் வங்கிக்கு நேரடியாகச் சென்று புகார் அளித்தால், அந்தப் பணத்தை உங்கள் வங்கிக் கணக்கில் திரும்ப கிரெடிட் செய்துவிடுவார்கள்.
ஒரு வேளை, நீங்கள் பணம் அனுப்ப விரும்புபவர் தொடர்பான எல்லா விவரங்களையும் சரியாகக் குறிப்பிட்டு, உங்கள் வங்கி தவறுதலாக வேறு ஒருவருடைய வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பினால், அது முழுக்க முழுக்க வங்கியினுடைய தவறு என்றாகிவிடுகிறது.
அவ்வாறான சூழ்நிலையில் நீங்கள் வங்கிக்கு நேரடியாகச் சென்று தகுந்த ஆதாரங்களுடன் எழுத்துபூர்வமான புகார் அளித்தால், உங்களுடைய வங்கி உடனே நடவடிக்கை எடுத்து அந்தப் பணத்தை உங்கள் வங்கிக் கணக்குக்கு மாற்றும்.
இதற்கான ஆதாரமாக, பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்ததற்கான ஸ்க்ரீன் ஷாட், நீங்கள் ஏற்கெனவே உங்கள் வங்கிக் கணக்கில் ரிஜிஸ்டர் செய்து வைத்துள்ள பணத்தைப் பெறுபவரின் வங்கி விவரங்கள் அந்தத் தவறு நடந்த குறிப்பிட்ட நாளுக்கான வங்கிக் கணக்குப் புத்தகம் அல்லது அறிக்கையின் நகல், இத்துடன் என்ன தவறு நடந்தது என்பதற்கான விளக்கக் கடிதம் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும்.