இளைஞர்களே வேலையில்லையா, பதிவு இருக்கா அதுக்கும் அரசாங்கம் பணம் தருது!
தமிழக அரசு மூலம் வேலைவாய்ப்புகள் இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆண், பெண் அனைவரும் விண்ணப்பித்து பயன் அடையலாம். தங்களுடைய தகுதிக்கு ஏற்ப பணம் உங்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தபடுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி அடைந்தவர்கள், 12-ம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்கள் மற்றும் தோல்வி அடைந்த விண்ணப்பதாரர்கள் இந்த திட்டத்தில் பயனடையலாம். இளங்கலை, முதுகலை பட்டதாரிகளும் இந்த திட்டத்தில் பயன்பெறமுடியும்.
10-ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு ரூ.200, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300 , 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மற்றும் அதற்கு சமமான தகுதிபெற்றவர்களுக்கு ரூ.400. பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ.600/- வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்பு காலம் 5 ஆண்டுகள் பூர்த்தி அடைந்திருந்தால் போதும். பொது பிரிவினர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினர்கள் 45 பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
தங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேராக சென்று விண்ணப்பங்களை பெறலாம். விண்ணப்பங்களை பெற்ற பின் சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை இணைத்து தங்கள் ஊரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் கையொப்பம் பெற்று விண்ணப்பங்களை தங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் படித்தவர்களுக்குத்தான் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பள்ளி மற்றும் கல்லூரி படிப்பினை முழுமையாக தமிழ்நாட்டிலேயே படித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் துறையில் எந்தவிதமான ஊதியம் பெறும் பணியிலோ அல்லது சுய தொழில் ஈடுபட்டவராவோ இருந்தல் கூடாது.
அதேபோல் விண்ணப்பதாரர்கள் தனியார் அல்லது அரசு துறைகளிடமிருந்து வேறு எந்த வகையிலும் உதவி தொகையினை பெறுபவராக இருந்தல் கூடாது. இந்த உதவி தொகை பெறுவதன் மூலம் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு எண் எந்த விதத்திலும் பாதிக்காது. வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெறும் காலத்தில் பதிவை தொடர்ந்து புதுப்பித்தல் வேண்டும்.