Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஸ்மார்ட் டிவி வாங்கினால் பரிசு சாம்சங் நிறுவனம் அதிரடி

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

ஸ்மார்ட் டிவி வாங்கினால் பரிசு சாம்சங் நிறுவனம் அதிரடி

சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்மார்ட் டிவி வாங்குவோருக்காக சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.சாம்சங் நிறுவனம் “The Big Game Fest” பெயரில் சிறப்பு திட்டத்தை அறிவித்து இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 2022 உலக கோப்பை கால்பந்து தொடரை ஒட்டி இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விளம்பர நோக்கில் அறிவிக்கப்பட்டு இருக்கும் திட்டத்தின் கீழ் சாம்சங் நிறுவன பிரீமியம், பெரிய ஸ்கிரீன் டிவிக்களை வாங்குவோருக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.தி பிக் கேம் ஃபெஸ்ட் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட பரிசுகளை வழங்குகிறது.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

இதில் வாடிக்கையாளர்கள் சாம்சங் நிறுவனத்தின் பிரீமியம், பெரிய ஸ்கிரீன் டிவி மாடல்களான நியோ QLED 8K, , நியோ QLED, QLED, தி ஃபிரேம் டிவி, தி ஃபிரீஸ்டைல் ப்ரோஜெக்டர் உள்ளிட்டவைகளை வாங்கும் போது பரிசுகளை பெறலாம். இதுதவிர சாம்சங் நியோ QLED, QLED, டிவி வாங்கும் போது பத்து ஆண்டுகளுக்கு நோ-ஸ்கிரீன் பர்ன்-இன் வாரண்டி வழங்கப்படுகிறது.

தேர்வு செய்யப்பட்ட டிவி மாடல்களை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 மதிப்புள்ள சாம்சங் கேலக்ஸி ஷி22 அல்ட்ரா அல்லது ரூ. 49 ஆயிரத்து 900 மதிப்புள்ள சாம்சங் அல்ட்ரா ஸ்லிம் சவுண்ட்பார் HW-S801B பெற முடியும். சாம்சங் ஃபிரீஸ்டைல் ப்ரோஜெக்டர் வாங்குவோருக்கு சாம்சங் சவுண்ட் டவர் T40 இலவசமாக வழங்கப்படுகிறது. இத்துடன் 75 இன்ச் UHD டிவி வாங்குவோருக்கு ரூ. 18 ஆயிரத்து 400 மதிப்புள்ள கேலக்ஸி கி23 ஸ்மார்ட்போன் வழங்கப்படுகிறது.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

சாம்சங் நிறுவனம் முன்னணி வங்கிகளான ஐசிஐசிஐ, கோடக் மற்றும் ஆர்பிஎல் உடன் இணைந்து மாதம் ரூ. 1990 எனும் மிக குறைந்த மாத தவணை முறை, அதிகபட்சம் 20 சதவீதம் வரை கேஷ்பேக் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது. இவை விளம்பர நோக்கில் அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகைகள் ஆகும். இவை ஆஃப்லைன் வலைதளங்கள் மற்றும் சாம்சங் வலைதளத்தில் வழங்கப்படுகிறது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.