திருச்சி உறையூரில் பிரம்மாண்டமான புதிய பிரியாணி ஹோட்டல் திறப்பு விழா
திருச்சி உறையூரில் பிரம்மாண்டமான புதிய பிரியாணி ஹோட்டல் திறப்பு விழா
மணப்பாறையை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்டது சுவை பிரியாணி என்ற பெயரிலான பேமிலி ரெஸ்டாரண்ட். பெயருக்கு ஏற்ப அதன் சுவை பொதுமக்களுக்கு பிடித்து ,வாடிக்கையாளர்களாக மாறி, பெரும் ஆதரவு கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து திருச்சி கருமண்டபம், பின்னர் முசிறி என மூன்று கிளைகளுடன் செயல்பட்டு வந்த இந்த சுவை பிரியாணி ரெஸ்டாரண்ட் .தற்போது திருச்சி புத்தூர் பகுதியில் அருணா தியேட்டர் அருகில் தனது நாலாவது கிளையை திறந்து உள்ளது.
இதில் சிக்கன், மட்டன், நாட்டுக்கோழி, காடை ,மீன் ,சூப் ,பிரட் வகைகள் ,பார்பிக்யூ கிரில் வகைகள், சைனீஸ் மற்றும் பிரியாணி வகைகள் ஷவர்மா உள்ளிட்ட பல்வேறு வகையான உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சிக்கன் மட்டன் பக்கெட் பிரியாணிகள் நான்கு முதல் ஐந்து நபர்கள் வரை சாப்பிடும் மினி அளவு ,மற்றும் ஃபேமிலி அளவு ,14 முதல்15 பேர்கள் சாப்பிடும் அளவு என மூன்று வகைகளில் விற்பனை செய்யப்படுகிறது. எங்களது தரத்தின் மீதும் சுவையின் மீதும் சிறப்பான மற்றும் கனிவான சேவைகள் மீதும் கொண்ட நம்பிக்கையால் இந்த புதிய ஃபேமிலி ரெஸ்டாரண்டை தொடங்கி உள்ளோம். மக்கள் சிறப்பான ஆதரவை தருவார்கள் என்று இதன் உரிமையாளர்கள் முஜிபுர் ரஹ்மான் மற்றும் உபயதுல்லா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.