திருச்சியில் சில்லறை வணிகர்களுக்கான சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனம் திறப்பு விழா
திருச்சியில் சில்லறை வணிகர்களுக்கான சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனம் திறப்பு விழா
14 நாடுகளில் இயங்கி வரும் லாஜிக் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் என்ற தனியார் தகவல் தொழில்நுட்பத் துறையின் சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அலுவலகம் திருச்சியில் திறக்கப்பட்டது. அமெரிக்காவில் 1997 ஆம் ஆண்டு திருச்சியைச் சேர்ந்த பிரபு குமார் என்பவரால் தொடங்கப்பட்டது லாஜிக் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் என்ற சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனம்.
ஆஸ்திரேலியா, துபாய், மெக்ஸிகோ, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ்,போர்ச்சுகல், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து சென்னையில் 2007 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் கிளையை தொடங்கிய இந்நிறுவனம் தொடர்ந்து பெங்களூரில் தொடங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது திருச்சியில் கரூர் பைபாஸ் சாலையில் புதிதாக இதன் நிர்வாக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது .இது குறித்து இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பிரபு குமார் கூறும் பொழுது திருச்சியில் அலுவலகம் திறப்பது எங்களது நீண்ட நாள் கனவு.
திருச்சி ஜோசப் கல்லூரி மற்றும் ஆர் இ சி கல்லூரியில் படித்த நான் அமெரிக்காவில் சாப்ட்வேர் துறையில் கால் பதித்து சுமார் 25 ஆண்டுகால பயணத்தில் 14 நாடுகளில் அலுவலகம் அமைத்து செயல்பட்டு வருகிறோம். இதில் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் பல முன்னணி நிறுவனங்களுக்கு சாப்ட்வேர் வடிவமைத்து தந்துள்ளோம் .பல்வேறு சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனங்கள் களத்தில் இருந்தாலும் நாங்கள் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் சில்லறை வணிகர்களின் வணிகத்தை மேம்படுத்தும் நோக்கில் எளிமையான முறையில் கையாள கூடிய வகையில் சாப்ட்வேர்களை தயாரித்துக் கொடுத்து வருகிறோம். ஆரக்கிள் நிறுவன வடிவமைப்பு மற்றும் எங்களது நிறுவன தனி வடிவமைப்பு மூலம் இதனை செய்து தருகிறோம்.
இந்திய கிளைகளில் திருச்சி மாவட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறோம் .தற்போது பொறியியல் கல்லூரிகளின் எம் சி ஏ மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து வந்த நாங்கள் தற்போது அனைத்து கல்லூரிகளிலும் தகுதியான மாணவ மாணவிகளை தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து பணியில் சேர்த்துக் கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்ற தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது இந்திய பிரிவு சீனியர் வைஸ் பிரசிடெண்ட் ராஜசேகர் கிருஷ்ணமூர்த்தி பைனான்சியல் ஹெட் ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.