பெற்றோர்களே! பர்ஸ் பத்திரம்… குழந்தைகளை டார்கெட் செய்யும் ரிலையன்ஸ்…
முகேஷ் அம்பானி தலைமை யிலான ரிலையன்ஸ் இண்டஸ் ட்ரீஸ் பல துறையில் வர்த்தகம் செய்து வரும் நிலையில் ரிடைல் துறையில் அம்பானி ஆசை மூத்த ஆசையாகத் தனது பேரனுக்காகப் பிறந்த போது , தாத்தாவின் பாசத்தைக் காட்டும் விதமாக உலகிலேயே மிகவும் பழமையான பிரிட்டன் பொம்மை நிறுவனமான Hamleys ஐ பெரும் தொகைக்கு வாங்கினார் .
Hamleys பொம்மைகளையும் , தயாரிப்புகளையும் இந்தியாவில் விற்பனை செய்யவும் , விநியோகம் செய்யவும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் Rowan என்ற தனிப் பிராண்டை உருவாக்கியது . Hamleys கடைகளில் கிடைக்கும் பொம்மைகள் அனைத்தும் சந்தையில் கிடைக்கும் பிற பிராண்ட் பொருட்களை காட்டிலும் கொஞ்சம் காஸ்ட்லியாக இருக்கும் , இதைச் சரி செய்யவே வர்த்தகத்திற்குப் பின்னால் இருந்த Rowan பிராண்ட் தற்போது வெளிச்சத்திற்கு வர உள்ளது .
இதன் மூலம் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் Hamleys ப்ரிமியம் பிரண்டாகவும் , Rowan நடுத்தர மற்றும் அதிகப்படியான மக்களை நுகர்வும் மாஸ் பிரிவு பிராண்டாகவும் இருக்கும்.
Rowan பிராண்ட் கடைகளில் குறைந்த விலை கொண்ட பொம்மைகளும் , அதிகத் தள்ளுபடிகளும் அளிக் கப்படும் . முகேஷ் அம்பானி கைப்பற்றிய பின்பு பிரிட்டன் நிறுவனமாக இருந்த Ham leys இந்திய நிறுவனமாக மாறியுள்ளது . Hamleys பிராண்டு கடைகள் 15 நாடுகளில் சுமார் 200 க்கும் அதிகமான விற்பனை கடைகளைக் கொண்டு உள்ளது .