ஒரு டிரில்லியன் டாலர் தொடுவோம்.. சிறு தொழிலுக்கு புதுசா இணையதளம்..!
ஒரு டிரில்லியன் டாலர் தொடுவோம்.. சிறு தொழிலுக்கு புதுசா இணையதளம்..!
சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களின் விவரங்கள் மற்றும் திட்டங்கள் சம்பந்தமான தகவல்களை வழங்கும் நோக்கில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் Valar 4.0 புதிய இணையதளம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் திறனை மேம்படுத்தவும், உற்பத்தியைப் பெருக்கவும், நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும், கருத்துக்களைப் பரிமாறவும், பிரச்சனைகள் மற்றும் சவால்களுக்குத் தீர்வு காணவும், தமிழ்நாடு முதலமைச்சரின் ‘2030-ம் ஆண்டுக் குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்‘ என்ற இலக்கை அடையவும். தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை Valar 4.0வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வலைத்தளத்தில் தொழில் துறையினர், சேவை வழங்குநர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உணவு பதப்படுத்துதல் மென்பொருள், வன்பொருள் மற்றும் பொருட்களின் தொகுப்புத் தேவைகள் (Packaging Requirements) போன்ற பல்வேறு பிரச்சனைகள், சிக்கல்கள் மற்றும் சவால்களுக்கு யோசனைகள் மற்றும் தீர்வுகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Valar 4.0 வலைத்தளம் தொழில் புரட்சியை ஏற்படுத்தும் என நம்புகின்றோம். ஆலோசனைகள், தகவல் உள்ளிட்டவை சரியாக கிடைத்தால் உற்பத்தியை பெருக்க முடியும். ஏப்ரல் மாதம் வரை 242 நிறுவனங்கள் Valar 4.0 வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். 29 நகரங்களி லிருந்து 122 பயனர்கள் தங்களின் பெயர், நிறுவனங்களின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ளும் விவரங்களை பதிவு செய்துள்ளனர்.