திருச்சியில் புதிதாக அமைக்கப்பட்ட மூர்த்தி டிரைவ் இன் தியேட்டர் திறப்பு விழா
திருச்சியில் புதிதாக அமைக்கப்பட்ட மூர்த்தி டிரைவ் இன் தியேட்டர் திறப்பு விழா
திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நவலூர் குட்டப்பட்டு பகுதியில் மூர்த்தி டிரைவின் தியேட்டர் என்ற திறந்தவெளி திரையரங்கம் திறக்கப்பட்டது. இதனை மூர்த்தி குழுமத் தலைவர் டாக்டர் மூர்த்தி ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கு ஏற்றும் திறந்து வைத்தார் .தியேட்டரின் டிக்கெட் கவுண்டரை மேயர் அன்பழகன் திறந்து வைத்தார் .முதல் டிக்கெட் விநியோகத்தை திரைப்பட நடிகர் பார்த்திபன் வழங்கினார் .திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் ப்ரொஜெக்டர் இயக்கி முதல் திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் காட்சியினை தொடங்கி வைத்தார் .
மூர்த்தி டிரைவ் இன் தியேட்டரின் நிறுவனர் டாக்டர் ஹரிஸ் குமார் பேசுகையில் இந்த தியேட்டரில் காட்சித் திரை 50 அடி அகலத்தில் காங்கிரீட் தளத்தினால் அமைக்கப்பட்டது ஒரே நேரத்தில் 100 கார்களை நிறுத்தி அதில் அமர்ந்து கொண்டே திரைப்படத்தை கண்டு மகிழ முடியும் இருசக்கர வாகனத்தில் வந்திருப்பவர்கள் கண்டு மகிழ நூறு பேர் அமரும் காட்சி கூடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது தினசரி இரவு 7 மணி மற்றும் 10 மணிக்கு என இரண்டு காட்சிகள் திரையிடப்படுகிறது என்று பேசினார்.
இவ்விழாவில் மூத்தீஸ் குழுமத்தின் தலைவர் டாக்டர் மூர்த்தி பேசுகையில் தமிழகத்தில் முதல் டிரைவின் தியேட்டர் என்ற சிறப்புடன் தொடங்கப்பட்டுள்ள இந்த திரையரங்கம் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. திருச்சி மாவட்ட திரைப்பட ரசிகர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் அத்துடன் திரைப்படத்துறை வரலாற்றில் இந்த தியேட்டர் ஒரு மைல் கல்லாக அமையும் என்று கூறினார்.
விழாவில் தொழில் அதிபர்கள் ஜோசப் லூயிஸ். ஜோசப் பிரான்சிஸ் .சாரநாதன் பொறியியல் கல்லூரி சேர்மன் ரவி மாத்தூர் கருப்பையா .தியேட்டர் வடிவமைப்பாளர்களான ஏ பி பில்டர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட அரசு அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் சினிமா விநியோகஸ்தர்கள் டாக்டர்கள் திரைப்பட ரசிகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் தியேட்டர் இயக்குனர் டாக்டர் நிகிதா நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை ஈரோடு மகேஷ் தொகுத்து வழங்கினார்.