வியாபாரத்தில் கொள்முதல் எச்சரிக்கைக்கான தகவல்கள்…
1) நமக்கு எது தேவை? எவ்வளவு தேவை? எந்த நேரத்தில் தேவை? என்பதில் புரிதல் வேண்டும் .
2) எந்தப் பொருள், என்ன விலைக்கு ,எந்தத் தரத்தில்,எந்த நேரத்தில் சந்தையில் விற்கப்படுகிறதுஅதன் எதிர்கால தேவை என்ன ? என்பது குறித்த தெளிவு வேண்டும்.
3) நம் வாடிக்கையாளர்களின் தேவை,விருப்பம் ,எதிர்பார்ப்பு, சூழல் இவற்றை கணக்கில் கொள்ள வேண்டும் .
3) விலைக்காக தரத்தை விட்டுக் கொடுக்க கூடாது.
4) விலை குறைவாக கிடைக்கின்றது என்று தேங்கக்கூடிய பொருட்களையும்,திணிக்கப்பட்ட பொருட்களையும் வாங்கக் கூடாது .
5) தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது; அதிக லாபம் கிடைக்கும், பரிசுப்பொருள் கிடைக்கும் என எதிர்பார்த்து தேவையில்லாத பொருட்களை வாங்கி விடக்கூடாது .
6) தொடர்ச்சியாக ,மெதுவாக விற்கக்கூடிய பொருட் களுக்கு ,உடனடியாக விற்கும் பொருளை விட லாப சதவிகிதம் அதிகம் நிர்ணயம் செய்ய வேண்டும் .
7) தேங்கி நிற்கும் பொருட்களுக்கு, அதிக கவனம் கொடுத்து குறைந்த லாபத்தில் கூட, விற்றுவிட வேண்டும்
8) அழுத்தத்தினால் வாங்கப்பட்டு, விற்பனையாகாத பொருட்களை குறைந்த விலைக்குக் கூட, விற்பனை செய்துவிட வேண்டும் .
9) கெட்டுப்போகாமல் மெதுவாக விற்கக்கூடிய ,சந்தையில் சாதாரணமாக கிடைக்காத பொருள்களுக்கு அதிக லாபம் வைத்துக்கொள்ளலாம்