எந்த நிறுவனத்திடமும் பணத்தை டெபாசிட் செய்யும்போது, டெபாசிட் திரட்ட அந்த நிறுவனத் துக்கு அங்கீகாரம் இருக்கிறதா, அதற்குரிய அரசு அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைத் தான் நீங்கள் முதலில் பார்க்க வேண்டும்.
எப்போதுமே ‘உத்தரவாதமான வருமானம்’ தருகிறோம் என்று யார் சொன்னாலும் முதலில் அவர்களிடம் இந்தப் பணம் எங்கு போகும், எதில் முதலீடு செய்து இவ்வளவு உத்தரவாத மாத வருமானத்தைப் பெற்றுத் தருவீர்கள் என்று கேட்க வேண்டும். இதற்கு பதில் இல்லையென்றால் அந்த முதலீட்டை தவிர்த்திடுங்கள்.-
உத்தரவாதமான வருமானம் தருவதாக விளம்பரம் செய்யும் திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு யார் பொறுப்பு என்பதைப் பார்த்துவிட்டு அவற்றில் இறங்குவது பற்றி முடிவெடுங்கள்.
பணத்தை முதலீடு செய்ய முடிவெடுப்பதற்குமுன் குறைகள், புகார்களைத் தெரிவிக்கும் அமைப்பு இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.