மக்கள் மத்தியில் ஒரு பொய்யான கருத்து வலம் வருகிறது. வாடகைக்கு குடியிருப்பவர்கள் சுமார் பத்து வருடத்துக்கு மேலாக ஒரே வீட்டில் குடி இருந்தால் அதன் பிறகு குடியிருப்பவரே விரும்பி வெளியேறினால் அன்றி , அவர்களை வீட்டு உரிமையாளர் வெளியேற்ற முடியாது என்று சட்டம் சொல்வதாக மக்களிடையே பரவி இருக்கிறது.
ஆனால் உண்மையில் அப்படியொரு நடைமுறை இல்லை. வாடகைக்கு என்று நுழையும் போதே அந்த வீட்டின் மீது வாடகை தாரருக்கும் எந்தவித சொத்துரிமை கோர முடியாது. ஆனால் அந்த இடத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஒருவருக்கு உரிய நிலத்தில் இன்னொருவர் தன்னுடைய வாழ்வாதாரத்துக்காக குடியிருந்தால், அந்நிலத்துக்கு உரிமையாளர் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்றால் அதனை Adverse possession என்று வகைப்படுத்துவர்.
12 வருடத்துக்கு மேலாக அதே இடத்தில் எந்தவித பணமும் செலுத்தாமல் குடி இருந்தால் அவர்களுக்கே அந்த இடம் சொந்தமாகிவிடும். ஆனால் வாடகைக்கு இருப்பவர்களுக்கு இது பொருந்தாது.