Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்.. 2026 புத்தாண்டில் குறையப் போகும் தங்கம் விலை?

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

உலகில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள், அமெரிக்காவில் வட்டி விகிதங்களில் குறைவு மற்றும் பாதுகாப்பான புகலிடங்களை முதலீட்டாளர்கள் தேடுவது ஆகியவையே தங்கம் விலை உயர்வுக்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

இந்தியாவில் தங்கம் மங்களகரமானதாகப் பார்க்கப்படுகிறது. அனைத்து பண்டிகைகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளுக்கும் தங்கம் பரிசாகவும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கம் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதேபோல், வெள்ளி விலையும் உச்சத்தைத் தொட்டு வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், வரும் 2026 புத்தாண்டில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்ற கேள்வி அனைவரிடமும் உள்ளது. இது தொடர்பாக உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது பற்றி இந்த பதிவில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

2025ஆம் ஆண்டில் தங்கம் விலை சுமார் 53% அதிகரித்துள்ளன. இந்த நிலையில், உலக தங்க கவுன்சில் (WGC) கூறியுள்ளதாவது, 2026ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை 15 முதல் 30% மேலும் உயரக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளது. அமெரிக்க பொருளாதாரம் வலுப்பெற்றால், தங்கமும் 5 முதல் 20% மலிவாக மாறக்கூடும் என்றும் உலக தங்க கவுன்சில் குறிப்பிட்டுள்ளது. மேலும், 2025ஆம் ஆண்டில் தங்கம் அதிக வருவாய் ஈட்டும் சொத்தாக இருந்தது.
இந்த நிலையில், 2026ல் தங்கம் அதிக விலை எப்படி இருக்கும் என்று தற்போது பார்ப்போம். 2026ஆம் ஆண்டில் தங்கத்தின் விலையை அதிகரிக்க மூன்று காரணங்கள் இருப்பதாக உலக தங்க கவுன்சில் கூறுகிறது. அது என்னவென்றால், உலகில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள், அமெரிக்காவில் வட்டி விகிதங்களில் குறைவு மற்றும் பாதுகாப்பான புகலிடங்களை முதலீட்டாளர்கள் தேடுவது ஆகியவையே தங்கம் விலை உயர்வுக்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. இந்த சூழல் தொடர்ந்தால், தங்கத்தின் விலை தற்போதைய விலையை விட 15 முதல் 30% அதிகமாக உயரலாம் என்று மதிப்பிடப்படுகிறது.

இதற்கிடையே, உலக தங்க கவுன்சிலின் மதிப்பீட்டின் மற்றொரு கூற்றைப் பார்ப்போம். அதன்படி, தங்கத்தின் விலை 5 முதல் 20% குறையலாம் என்றும் மதிப்பிட்டுள்ளது. அடுத்தாண்டு திருமணத்திற்கு திட்டமிடுபவர்களுக்கு இது ஒரு நிம்மதியான செய்தியாக இருக்கலாம். 2026ஆம் ஆண்டில் அமெரிக்க பொருளாதாரம் வேகமடைந்தால், டாலர் வலுப்பெற்று அமெரிக்க பத்திர வருவாய் உயர்ந்தால், தங்கத்தின் விலை 5% முதல் 20% வரை குறையக்கூடும். இந்த சூழ்நிலையில், மக்கள் பங்குகள் மற்றும் பிற ஆபத்தான முதலீடுகளில் முதலீடு செய்வார்கள். மேலும் தங்கத்திற்கான தேவையும் அப்போது குறையக்கூடும்.
தங்கம் விலை முற்றிலும் சரியுமா? இல்லை. தங்கம் விலை வீழ்ச்சியடையும் போதெல்லாம், இந்திய நுகர்வோர், ஆசிய நகைச் சந்தைகள் மற்றும் நீண்ட கால முதலீட்டாளர்கள் அல்லது வேறு யாராவது, அதிகமாக தங்கத்தை வாங்கத் தொடங்குவார்கள். இதன் காரணமாக தங்கத்தின் விலை குறையாது என்று உலக தங்க கவுன்சில் கூறுகிறது. மொத்தமாக, 2026ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்று உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.