மாதம் ரூ.10,000 பென்சன் தரும் ஜீவன் ஆனந்த் பாலிசி..!
எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசி திட்டம் மூலமாக ஒரே பிரிமியம் தொகையாக ரூ.20,36,000 செலுத்தி நீங்கள் ஓய்வுக் காலத்தில் மாதா மாதம் ரூ.10,000 பென்சன் வாங்கலாம். இத்திட்டத்தில் நீங்கள் உடனடியாகப் பென்சன் வாங்க முடியும்.
மாதா மாதம் பென்சன் வாங்காமல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ, ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது ஒரு வருடத்துக்கு ஒரு முறையோ பென்சன் வாங்கிக் கொள்ளலாம்.
பென்சன் வாங்கத் தொடங்கிய அடுத்த ஒரு வருடத்தில் நீங்கள் கடன் வாங்கிக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. அதேபோல, பென்சன் வாங்கத் தொடங்கிய பிறகு மூன்று மாதங்களில் நீங்கள் பாலிசியை சரண்டர் செய்யவும் முடியும். நீங்கள் இந்த பாலிசியை பெற குறைந்தபட்சம் 30 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
அதேபோல அதிகபட்சம் 85 வயது வரையில் இந்த பாலிசியை வாங்கலாம். பாலிசிதாரர் மரணிக்கும் வரை அவருக்கு பென்சன் தொகை கிடைத்துக் கொண்டே இருக்கும். அவர் இறந்த பிறகு இந்த பாலிசி செயலிழந்துவிடும்.