பணம் சம்பாதிக்க கொட்டி கிடக்கும் வேலைகள்
டிஜிட்டல் மார்க்கெட்டிங்
இந்த தொழில் ஒரு பழமையான டிஜிட்டல் மார்க்கெட்டிங். ஒரு நிறுவனம் அவர்களது பொருட்களை ஆன்லைனில் விற்கும் போது அதனை உங்களின் மூலமாக வேறொருவருக்கு விற்றால் அதற்கான ஒரு பங்கு (கமிஷன்) உங்களுக்கு கிடைக்கும்.
இந்த தொழிலை நீங்கள் Amazon, Flipkart போன்றவற்றில் செய்யலாம். Affiliate Marketing தொடங்குவதற்கு அதில் ஜாயின் செய்ய வேண்டும், பின் ஏதேனும் ஒரு பொருளை தேர்வு செய்து அதனை Whatsapp, Facebook, Instagram போன்றவற்றில் விளம்பரம் செய்ய வேண்டும்.நீங்கள் எந்த மாதிரியான பொருளை தேர்வு செய்து விற்பனை செய்கிறீர்களோ அதை பொறுத்து நீங்கள் இந்த தொழிலில் லாபம் பார்க்கலாம்.
இன்சூரன்ஸ் அட்வைசர்
இன்றைய சூழலில் அனைவருக்கும் பயன்படுவது இன்சூரன்ஸ். ஒரு சிலருக்கு இன்சூரன்ஸ் பற்றிய விழிப்புணர்வு, அதை பற்றிய தகவல்கள் தெரியாது. அப்படிபட்டவர்களுக்கு காப்பீடு (Insurance) பற்றி விளக்கி அவர்களை (Insurance) போட வைக்க வேண்டும்.
இந்த காப்பீடை போட வைப்பவர்களுக்கு அந்த கம்பெனியில் இருந்து பங்கு கிடைக்கும். இந்த வேலையை நீங்கள் பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ தொடங்கலாம்.இந்த வேலையை செய்வதற்கு நீங்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். IRDA தேர்வு எழுத வேண்டும் இந்த தேர்வில் 50 கேள்விகள் கேட்கப்படும் அதில் நீங்கள் 20 கேள்விகளுக்கு சரியான பதிலளிக்க வேண்டும்.
Digital Real Estate :
Digital Real Estate என்பதுஉங்கள் ஊரில் சில இடங்கள் விற்பதற்காக இருக்கும். அந்த இடத்தின் சொந்தக்காரரிடம் நான் உங்களுக்கு இந்த இடத்தை விற்று தருகிறேன் என்று கூறி, அந்த இடத்தின் புகைப்படங்களை Whatsapp, Facebook, Instagram போன்றவற்றில் பதிவிட்டு அதன் மூலமாக வாடிக்கையாளர்களை உருவாக்கி அதன் மூலம் விற்க வேண்டும். டிஜிட்டல் ரியல் எஸ்டேட் மூலம் இடத்தின் சொந்தக்காரரிடமிருந்தும், வாடிக்கையாளர்களிடமிருந்தும் உங்களுக்கு பங்கு (கமிஷன்) கிடைக்கும்.
நெட்வொர்க் மார்க்கெட்டிங்
ஒரு குழுவாக சேர்ந்து செயல்படுவது தான் NetworkMarketing.இந்த வேலையை செய்வதற்கு Amway, Tupperware போன்ற கம்பெனிகளை தொடர்பு கொள்ளலாம்.இந்த வேலையை செய்வதற்கு முன் நீங்கள் ஒரு குழுவை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். பின் அந்த குழுவிற்கென ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கவும்.
Team Leader கம்பெனியை அணுகி அவர்களிடம் இருந்து பொருளை வாங்கி வர வேண்டும்.பின் அந்த பொருளை குழுவில் உள்ள அனைவரும் தனித்தனியாக குடும்பத்தில் உள்ளவர்களிடம், நண்பர்களிடம் விற்பனை செய்ய வேண்டும். நீங்கள் பொருள்களை விற்பனை செய்தவுடன் அந்த நிறுவனத்திடம் இருந்து உங்களுக்கான பங்கு (கமிஷன்) கிடைக்கும்.
டிஜிட்டல் கோச்சிங்
இப்பொழுது அனைத்தும் டிஜிட்டல் மையமாக உள்ளது. இதை பயன்படுத்தி தங்களுக்கு தெரிந்த தியான பயிற்சி, Jim Coaching, Coding Class போன்ற வகுப்புகளை Whatsapp Group Create மூலமாகவோ எடுக்கலாம். உங்களுக்கென ஒரு வெப்சைட் உருவாக்கியும் இந்த வேலையை செய்யலாம் அல்லது Vedanta, udemy, WhiteHat Jr போன்ற வலைத்தளத்திலும் செய்யலாம்.