Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

மீண்டும் மிரட்டும் ஜோக்கர் வைரஸ்

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

கடந்தாண்டு கூகுள் ஆன்ட்ராய்டு போன்களை மிரட்டிய ஜோக்கர் வைரஸ் (தகவல்களைத் திருடும் அபாயகரமான malware) மீண்டும் வந்துள்ளது.இந்த வைரஸ் மூலம் எஸ்எம்எஸ், தொலைபேசி தொடர்பு எண்கள், தனிப்பட்ட தகவல்கள் என அனைத்தும் திருடப்படும் என அப்போதே சைபர் அமைப்புகள் எச்சரித்திருந்தன. இச்சூழலில் தற்போது மீண்டும் கூகுள் இயங்குதள ஸ்மார்ட்போன்களைக் குறிவைத்திருக்கிறது இந்த ஜோக்கர் வைரஸ்.

3

Auxiliary Message, Fast magic SMS, Free CamScanner, Super Message, Element Scanner, Go messages, travel wallpapers and Super SMS ஆகிய 8 செயலிகள் மூலம் ஜோக்கர் வைரஸ் பரவ இருப்பதை முன்னிட்டு, கூகுள் இதற்கு முன்பே வைரஸ் ஊடுருவ வாய்ப்புள்ள செயலிகளை ஜூலை மாதம் 11 செயலிகளையும் அக்டோபர் மாதம் 34 செயலிகளையும் நீக்கியிருந்தது.

PDF Scanner, Mint Leaf Message-Your Private Message, Unique Keyboard Fancy Fonts & Free Emoticons, Tangram App Lock, Direct Messenger, Private SMS, One Sentence Translator Multifunctional Translator, Style Photo Collage, Meticulous Scanner, Talent Photo Editor Blur focus, Care Message, Part Message, Paper Doc Scanner and Blue Scanner போன்ற செயலிகளில் இந்த ஜோக்கர் வைரஸ் ஊடுருவியுள்ளது. இவற்றையும் கூகுள் நீக்கியதுடன், இந்தச் செயலிகளை பயன்படுத்தி வந்தால் உடனடியாக uninstall செய்யுங்கள் என எச்சரித்துள்ளது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.