கலபுரகி டு காசியாபாத்
கர்நாடகா மாநிலம் கலபுரகிலியிருந்து உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்திற்கு சாலை மூலமாகவோ, ரயில் வழியாகவோ செல்ல 25 மணி நேரத்திற்கும் அதிகமாகத் தேவைப்படுகிறது. இதையடுத்து பிராந்திய இணைப்புத் திட்டமான உடான் திட்டத்தின்கீழ் கலபுரகிலியிருந்து காசியாபாத்தை இணைக்கும் வகையில் புதிய விமான சேவையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
ஸ்டார் ஏர் விமான நிறுவனம், வாரத்திற்கு மூன்று சேவைகளை கலபுரகி- ஹின்தோன் இடையே இயக்குகிறது. கலபுரகிலியிருந்து புறப்படும் விமானம் காசியாபாத்தில் உள்ள ஹின்தோன் விமான நிலையத்தை 2 மணி 20 நிமிடங்களில் சென்றடைகிறது.
கலபுரகி, ஹின்தோன் பகுதி மக்கள் எளிதான போக்குவரத்தின்றி பெரும் சிரமத்திற்கு உள்ளானதால் அவற்றை போக்கும் வகையில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஆகியவை மேற்கொண்டுள்ள முயற்சியின் ஒரு பகுதியாக இந்த விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உடான் திட்டத்தின் கீழ் 295 வழித்தடங்கள், ஐந்து ஹெலிகாப்டர் நிலையங்கள் உட்பட 53 விமான நிலையங்கள், 2 நீர் விமான நிலையங்கள் ஆகியவை இயங்கி வருகின்றன.