திருச்சி கிராப்பட்டியில் அயிரை மீன் கருவாட்டுடன் கம்மங்கூழ்..!
திருச்சி கிராப்பட்டியில் 3 வருடங்களாக கம்மங்கூழ் விற்பனை செய்து வருகிறார் கருப்பையா. வெயிலுக்கு இதமான, உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்மங்கூழ், மோர் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்.
இவர் தரும் மோர் மற்றும் கம்மங்கூழுக்கு தொட்டுக் கொள்ள பாகற்காய், புளி மிளகாய், அயிரை மீன் கருவாடு, உருளைக்கிழங்கு, சுண்டவத்தல், கொத்தவரங்காய், அப்பளம் ஆகியவை கொடுக்கிறார். மோர் தயாரிக்க சுத்தமான பசும்பால் மட்டுமே உபயோகப்படுத்துகிறார்.
“தற்போது இளம் தலைமுறையினர் துரித உணவுகளின் பாதிப்பை உணர்ந்து, பாரம்பரிய உணவுகளை எடுத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். இதனால் இளைஞர்கள், பெண்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். வருமானம் குறைவாக இருந்தாலும் ஆரோக்கியமான உணவை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடர்ந்து மகிழ்ச்சியுடன் செயல்பட்டு வருவதாக” கூறுகிறார் கருப்பையா.