கேரள பாரம்பரிய அசைவ உணவுகள் திருச்சியில்..!
திருச்சியில், 30 ஆண்டுகளாக கேரள உணவினை நா ருசிக்க உண்டு மகிழ்ந்த மக்கள் ஏராளம். பசிக்கு உணவு தேடும் திருச்சி மக்கள் தவறாமல் நாடும் உணவகங்களில் ஒன்று கேரளா மெஸ். தேங்காய் எண்ணெய் வாசத்துடன் அசைவ உணவை உண்டு மகிழ்ந்தவர்கள் மீண்டும் மீண்டும் அந்த சுவையை அனுபவிக்க படை எடுப்பது திருச்சி, சிங்காரத்தோப்பில் உள்ள
கேரள மெஸ் உணவகத் திற்குத் தான்.
சாப்பாட்டிற்கு சீரக சம்பா அரிசி, தேங்காய் எண்ணெய், மசாலா பொருட்கள், நெய் எல்லாமே கேரளா விலிருந்து குறிப்பாக மசாலா பொருட்கள், நெய் முதலியவை கேரளாவிலிருந்து அவர்கள் வீட்டிலேயே தயாரித்து எடுத்து வந்து உணவிற்கு உபயோகப் படுத்துகின்றனர்.
அதனால் கேரளாவின் நிஜ ருசி கொஞ்சமும் குறையாமல் கிடைக்கிறது. ஏன்.. உணவு சமைக்கும் ஆட்கள் கூட கேரள மக்கள் தான்.
கேரளா மெஸ் என்றாலே பீப் உணவுகள். பீப் உணவு என்றாலே கேரளா மெஸ் என்ற சொல்லாடல் திருச்சியில் உள்ளது. குறிப்பாக கேரளாவின் சிறப்பம்சமான பீப் உணவினை
தேடி வருபவர்களின் எண்ணிக்கை இங்கு அதிகம். தேங்காய எண்ணெய்யில் தயாரிக்கப்பட்ட பரோட்டாவை பீப் கிரேவியுடன் தொட்டு உண்ணவென்று வருவோர் அதிகம். மற்றொரு ஸ்பெஷல் கேரளாவின் பாரம்பர்யமான மீன் பொழிச்சது.
30 ஆண்டுகளுக்கு முன்பு சிங்காரத் தோப்பில் ஒரு சிறிய சந்தில் சின்னதாக தொடங்கப்பட்ட கேரள மெஸ், தரத்தில் சமரமின்றி, கேரளாவின் பாரம்பரிய உணவினை தரம், ருசி மாறாமல் தொடர்ந்து கொடுத்து வந்ததால் இன்று திருச்சி, தில்லைநகர் 9வது கிராஸில் (மேற்கு) பெரிய அளவில் கண்ணை கவரும் வண்ண முகப்புத் தோற்றத்துடன் தொடங்கப்பட்டுள்ளது அதன் புதிய கிளை.
பீப் உணவு வகைகள், கடல் உணவுகள், காடை, முட்டை வகைகள், ஸ்பெஷல் பீப் பிரியாணி, சவர்மா, சிக்கன் டிக்கா, கபாப் வகைகள், தந்தூரி என ஒவ்வொன்றிலும் ஏராளமான வகைகளில் மணம், ருசி மாறாமல் சமைத்து தருகிறார்கள். மற்ற அசைவ உணவகத்துடன் ஒப்பிடும் போது இங்கு விலையும் குறைவு. அத்துடன் சுவையும் கேரள மணம். வாருங்கள் புதிய மணத்துடன், புதிய சுவையை ருசிக்க..!