தலைமை பொறுப்பு : வாய்ப்பு கிட்டாத பெண்கள்..
பெண்கள் தான் குடும்பத்தின் ஆணி வேர் என்பார்கள். பெண்கள் சம்பாதிக்க ஆரம்பித்தால் ஒவ்வொரு குடும்பம் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. அதற்கேற்றால் போல் இன்றைக்கு உள்ள சூழலும், பொருளாதார நிலையும் மாறியுள்ளது. குடும்பத்தில் ஆண்கள் மட்டும் இல்லை பெண்களும் சம்பாதித்தால் தான் ஓரளவிற்கு சமூகத்தில் வாழ முடியும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது.
இந்த சூழலில் பல்வேறு நிறுவனங்களும் பெண்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பது நல்ல விஷயம் தான். ஆனால் அந்நிறுவனத்திலேயே பெண்கள் ஆளுமைத் தன்மைக்கு வருவதை யாரும் விரும்பவில்லை என்ற கூற்றை நிரூபணமாக்கியுள்ளது தற்போது வெளியாகியுள்ள அறிக்கை ஒன்று. அப்படி என்ன தான் அந்த அறிக்கையில் இருந்தது? என நாமும் தெரிந்து கொள்வோம்.
பெண்களுக்கான வேலைவாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பல்வேறு நிறுவனங்கள் பெண்களை ஆரம்ப கட்ட பணிகளில் தான் பணியாற்றுவதற்கு அனுமதியளிக்கிறது. அதே சமயம் நிறுவன மேலாதிரியாகப் பணியாற்றக்கூடிய எண்ணிக்கை குறைந்து வருவதாக அவதார் மற்றும் இந்தியாவில் பெண்களுக்காகப் பணியாற்றும் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி, ஆரம்ப நிலையில் பணியாற்றும் பெண்
களின் எண்ணிக்கை கடந்த 2017ல் 33 சதவீதம் என்ற நிலையிலிருந்து, 2022ல் 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே சமயம் நிர்வாக மட்டத்தில் ஒன்பது சதவீதம் குறைந்துள்ளது என்றும், மூத்த மேலாளர் நிலையைப் பொறுத்த மட்டில் 18 சதவீதம் மற்றும் கார்ப்பரேட் நிர்வாக செயல் அதிகாரி என்ற அளவில் பார்க்கும் போது 17 சதவீதமாக குறைந்துள்ளது என்று அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.
குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டு களில் பல்வேறு நிறுவனங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இதற்கு ஆரம்ப நிலையில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது தான் காரணம் என்கிறார் அவதார் நிறுவன தலைவர் சவுந்தர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். அதே சமயம் பெண் முதலாளித்துவத்தில இருக்கக்கூடிய எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதோடு பல்வேறு நிறுவனங் களில் பெண் தலைவர்களைக் கொண்டாடுவது மற்றும் அவர்களின் வெற்றிக்கதைகளைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் எனவும் பாலின சமுதாய வேறுபாடு இல்லாமல் பெண்களையும் அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான ஆய்வில், குழந்தைகளைக் கவனிக்க வேண்டும் மற்றும் குடும்ப சூழல் காரணமாக பல்வேறு பெண்கள் ஆரம்ப நிலைப் பணியை விட்டு செல்வதாக அறிக்கை ஒன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.