“2 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் லென்ஸ்கார்ட்”
கடந்த 2010ல் தொடங்கப்பட்ட, மூக்கு கண்ணாடி விற்பனை செய்யும் ”லென்ஸ்கார்ட்”நிறுவனம் அதன் பன்னாட்டு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் வகையில், சிங்கப்பூர், மேற்கு ஆசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் கூடுதலாக, 3200 பேரை பணியமர்த்த இருப்பதாக தெரிவித்து உள்ளது.
தற்போது இந்நிறுவனத்தில் பொறியாளர்கள், தரவு விஞ்ஞானிகள், வடிவமைப்பாளர்கள் உள்ளிட்ட 5 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இந்நிலையில், நடப்பு நிதியாண்டுக்குள் புதிதாக 2 ஆயிரம் பேரை பணியில் அமர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, தரவு நிபுணர்கள், வணிக பகுப்பாய்வாளர்கள், தரவு பொறியியளாளர் போன்றோரை பணியமர்த்தவும் திட்டமிட்டுள்ளது.